மதுக் கடையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார் முல்லா.அவர் ஒரு கோழை.ஆனால் மது அவருக்கு துணிச்சலைத் தந்தது.அப்போது அங்கு கொலைகாரன் போல் தோற்றமளித்த ஒருவன் வந்தான்.சுய நினைவில் இருந்தால் முல்லா அஞ்சி ஓடியிருப்பார்.ஆனால் மதுவின் துணையால் அவருக்கு அறவே அச்சம் இல்லை.அஞ்சாது அவர் அமர்ந்திருந்ததைக் கண்ட அந்த முரடன் அவர் காலின் மேல் ஓங்கி மிதித்தான்.முல்லாவுக்குக் கோபம் வந்தது.வெகுண்டெழுந்து கேட்டார்,''என்ன செய்து கொண்டிருக்கிறாய்?இது வேண்டுமென்றா அல்லது வேடிக்கைகாகவா?''முரடன் ஓங்கி மிதித்ததில் முல்லாவுக்கு போதை இறங்கி விட்டது.சுய நினைவுக்கு வந்து விட்டார்.அந்த இடைவெளிக்குள் முரடனைககேள்விகேட்டுவிட்டார்.அந்தஆள்சொன்னான்,'காரியமாத்தாண்டா,'
முல்லா சொன்னார்,''அப்படிஎன்றால் உங்களுக்கு நன்றி.காரியாமாகத்தான் என்றால் சரி.ஏனெனில் எனக்கு இந்த விளையாட்டெல்லாம் பிடிக்காது.''
|
|
Post a Comment