அமெரிக்காவின் நாசா,விண்வெளியில் மனிதர்களை அனுப்ப ஆரம்பிக்கும் போது,அவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தது.வானத்தில் புவி ஈர்ப்பு விசை இல்லாததால் அங்கு பேனாவால் எழுத முடியவில்லை.ஆனால் பார்த்த விசயங்களை எழுதி ஆக வேண்டுமே!என்ன செய்வது?அதற்கான வழியைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒரு பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களும் பத்துஆண்டுகள் ஆராய்ச்சி செய்து,ஒரு கோடி டாலர் செலவழித்து புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும்.நீருக்கு அடியிலும்,கடுமையான வெப்ப நிலையிலும் மேலிருந்து கீழும்,கீழிருந்து மேலும் எந்த நிலையிலும் எழுதக் கூடிய ஒரு பேனாவைக் கண்டுபிடித்தனர்.
ஒரு ஆர்வத்தினால் ரஷ்யர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்தார்கள் என்று விசாரித்த போதுதெரிய வந்தது;''அவர்கள் பென்சிலை உபயோகித்தார்கள்!''
|
|
Post a Comment