அனுபவங்கள் வழி காட்ட வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது.அனுபவம் சிறந்த பள்ளி.ஆனால் ஒருவன் அதில் தானே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.அறுபது வயதில் ஒருவர் புரிந்து கொண்ட தத்துவங்களை முப்பது வயதுள்ள ஒருவருக்கு ஏன்புரிய வைக்கமுயற்சி செய்ய வேண்டும்?கரையில் நின்று கொண்டு மற்றவர் நீச்சல் அடிப்பதைப் பார்த்து நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா?தண்ணீரில் குதித்து கையைக் காலை அசைத்துத் தானே நீச்சல் கற்றுக் கொள்ள முடியும்?பழுத்த இலை உதிர்ந்து பச்சை இலைக்கு வழி விடுவது தான் இயற்கை நியதி.ஒவ்வொரு தலை முறையும் தங்களை விட அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக வாழும் என்று நம்ப வேண்டும்.''எல்லாமே குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருக்கிறது,''என்று பேசுவது தவறு.அவரவர் காலத்திற்கு ஏற்ற மாதிரி அவரவர்வாழக் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புங்கள்.அந்த நம்பிக்கையில் தான் உலகத்தின் வளர்ச்சி இருக்கிறது.
|
|
Post a Comment