அக்பர் ஒருநாள் பீர்பாலிடம் மனைவிக்கு பயப்படாத கணவன் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.பீர்பாலும் தனக்குத் தெரிந்தவரை யாரும் அப்படியில்லை என்றார்.அக்பர்,''பீர்பால்,இதோ.ஒரு வெள்ளைக்குதிரையும், ஒரு கறுப்புக் குதிரையையும் எடுத்துக் கொள்.யாரேனும் விதிவிலக்கான ஆள் இருந்தால் அவனுக்கு அவன் விரும்பும் ஒரு குதிரையை அரசனின் பரிசு என்று சொல்லிக்கொடு ''என்றார்.பீர்பாலும் குதிரைகளுடன் பல ஊர்களுக்கு சென்று ஒவ்வொருவரை விசாரித்தும் அதுமாதிரியான ஆள் அகப்படவில்லை. ஒரு குதிரைக்காக யாரும் தங்கள் வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.இறுதியில் சோர்ந்துபோய் ஒரு மல்யுத்த வீரனைக் கண்டு அவனிடம் இக்கேள்வியைக் கேட்டார்.அவன் இவரைக் கை குலுக்கிய விதத்திலிருந்தே அவன் நிச்சயம் மனைவிக்கு பயந்தவன் அல்ல என்று முடிவு செய்து,''எங்கே உன் மனைவி?''என்று கேட்க அவனும் தன மனைவியை நோக்கிக் கையை காட்டினான்.அங்கு மிகவும் சிறிய உருவம் கொண்ட மெலிந்த ஒரு பெண் சமைத்துக் கொண்டிருந்தாள்.பீர்பால் இதை மேற்கொண்டு விசாரிக்க வேண்டியதில்லை என்று கருதி,''இந்த இரண்டு குதிரைகளில் ஒன்றை நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.மனைவிக்குப் பயப்படாத உனக்கு இது அரசனின் பரிசு,''என்றார்.அவன் கறுப்புக் குதிரையை தேர்ந்தெடுத்தான்.அப்போது அவன் மனைவி உரத்த குரலில் கறுப்புக் குதிரை வேண்டாம்,வெள்ளை வேண்டும் ''என்றாள்.அவன் கருப்பே இருக்கட்டும் என்று சொல்ல அவள் மீண்டும் கத்தினாள்,''நீ கறுப்புக் குதிரையை எடுத்தால் நடப்பதே வேறு.உன் வாழ்வை நரகமாக்கிவிடுவேன்,ஜாக்கிரதை,''வீரனும்,''சரி,சரி,நான் வெள்ளைக் குதிரையையே எடுத்துக் கொள்கிறேன்.நீ கத்தாமல் இரு,,''என்றான்.பீர்பால் உடனே ,''உனக்கு எதுவும் கிடையாது.நீ தோற்று விட்டாய்.நீயும் மனைவிக்குப் பயந்தவன்தான்.இங்கு விதிவிலக்கானவர் யாருமே இல்லை.''என்றார்.
|
|
ஹா.. ஹா.. இந்த உலகத்துல அப்படி ஒருத்தரை கண்டு பிடிக்க முடியுமா என்ன? ஹா.. ஹா.. நல்ல பதிவு