அந்நிய நாட்டின் மீது இருமுறை போர் தொடுத்து வெற்றி கண்ட ஒரு மன்னன்,தோற்றவன் எந்த நேரமும் பழி வாங்கலாம் என்ற அச்சத்தில் இருந்தான்.ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடப்போனான்.துறவி ஒருவரை சந்தித்தான்.துறவியிடம் தன பிரச்சினை குறித்து சிறிது நேரம் பேசி விட்டு, ''உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?''எனக் கேட்டான்.''என்னுடைய அடிமையின் அடிமை நீ.நீ எனக்கு எப்படி உதவ முடியும்?''என்று கேட்டார் துறவி.வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு,''எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?''என்று கேட்டான்.துறவி சொன்னார்,''என்னிடம் ஒரு அடிமை இருக்கிறான்.அவன் உனக்கு எஜமானன்,''மன்னனும்,''உங்களிடம் அடிமையாயிருப்பது யார்?''எனக் கேட்டான்.''அச்சம் ''என்றார் துறவி.தலை குனிந்தான் மன்னன்.பதவியில் இருப்பவர்கள் பயத்துக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.அந்த அச்சத்தின் காரணமாகவே பதவியையும் விடாமல் பற்றிக் கொள்கிறார்கள்.
|
|
Post a Comment