வாழ்வில் சில எளிய விஷயங்கள் தான் நம் வலிமைக்குக் காரணமாக இருக்கின்றன.அவற்றை அலட்சியப்படுத்துவதாலேயே நமக்குப் பல நோய்கள் வருகின்றன.
நாம் உணவு உண்டபின் செய்யக்கூடாத சில எளிய விஷயங்கள்;
*உணவு உண்ட உடன் சிகரெட் குடிக்கக்கூடாது.உணவு சாப்பிட்டவுடன் குடிக்கும் ஒரு சிகரெட் பத்து சிகரெட் குடிப்பதற்கு சமம்.இதனால் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் ஆகும்.
*உணவு உண்டவுடன் பழங்கள் சாப்பிடக்கூடாது.சாப்பிட்டால் வயிறு ஊதும்.எனவே ஓரிரு மணி நேரம் உணவுக்கு முன்னரோ பின்னரோ சாப்பிடலாம்.
*உடனே தேநீர் அருந்தக்கூடாது.அதில் அமிலம் அதிகம் இருப்பதால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன் சத்துக்கள் இறுகி ஜீரணம் கடினமாகும்.
*சாப்பிடும்போது பெல்ட் அணிந்திருந்தால் முடித்தவுடன் அதைக் கழட்டக் கூடாது .குடல் பிரச்சினைகள் வரும்.
*சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது.குளிக்கும்போது உடல் முழுவதும் அதிக இரத்தம் பாயும்.எனவே வயிற்றுக்கு வரும் இரத்தத்தின் அளவு குறையும்.எனவே ஜீரணம் பாதிக்கப்படும்.
*சாப்பிட்டவுடன் நடக்கக் கூடாது சிலர் சாப்பிட்டவுடன் சிறிது தூரம் நடப்பதைப் பழக்கமாக வைத்துள்ளனர்.அது உணவிலுள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதைப் பாதிக்கிறது.
*உணவை உண்டவுடன் தூங்கக்கூடாது.ஜீரணம் ஆவது கடினமாகும் வாயுத் தொல்லைகள் உருவாகும்.
|
|
Post a Comment