உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பெரிய குற்றம்

2

Posted on : Monday, August 29, 2011 | By : ஜெயராஜன் | In :

'தாவோ 'தத்துவத்தின் தந்தை லா வோ த்சு சீனாவின் பெரிய ஞானி.அவர் வாழ்ந்தபோது இருந்த  அரசர் ஒருநாள் அவரிடம் வந்து ,''நீங்கள் பெரிய ஞானி நீங்கள் என் அரசவையில் நீதிபதியாக இருந்தால் எனக்குப் பெருமையாக இருக்கும்,''என்றார்.ஞானி எவ்வளவோ மறுத்து,பின்னால் வருத்தப்படக்கூடாது என்று சொன்ன போதிலும்  அரசன் மிகவும் வற்புறுத்தவே அவரும் ஒத்துக் கொண்டார்.முதல் நாள் ஒரு வழக்கு வந்தது. பணக்காரன் ஒருவன் வந்து,''இவன் என் வீட்டில் புகுந்து திருடி விட்டான்.இவனுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்,''என்று வேண்டிக் கொண்டார்.ஞானியும் வழக்கை விசாரித்துவிட்டு,''திருடியவனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை.இந்தப் பணக்காரனுக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை,''என்று தீர்ப்புக் கூறினார்.அரசனே இந்தத் தீர்ப்பைக் கேட்டுத் திடுக்கிட்டான்.பணக்காரனோ அலறிக்கொண்டே,''இது என்ன அநியாயமான தீர்ப்பு?''என்று கேட்டான்.ஞானி சொன்னார்,''ஒருவனைத் திருடனாக்கியது நீ செய்த குற்றம்.இவன் வறுமைக்கு நீதான் காரணம்.இவனாவது ஒருவனிடம்தான் திருடியிருக்கிறான்.நீயோ பலருடைய சொத்தைத் திருடியுள்ளாய்.ஏழைகளின் உழைப்பை நீ திருடியுள்ளாய்.நீ செய்த குற்றங்கள் இரண்டு.ஒன்று பிறர் உழைப்பத் திருடியது.மற்றொன்று நல்லவன் ஒருவனைத் திருடத் தூண்டியது.நியாயமாகப் பார்த்தால் உனக்குக் கூடுதல் தண்டனை தந்திருக்க வேண்டும்.நான் இரக்கம் உடையவன்.அதனால் உனக்குக் குறைந்த தண்டனை தான் கொடுத்திருக்கிறேன்,''அவர் அதற்குப்பின்னரும் நீதிபதியாய் இருந்திருப்பார் என்று  எண்ணுகிறீர்களா?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

அவர் அதற்குப்பின்னரும் நீதிபதியாய் இருந்திருப்பார் என்று எண்ணுகிறீர்களா? அக்காலத்தில் நீதிக்கு மதிப்பிருந்ததால் அவர் மீண்டும் நீதிபதியாக இருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் ... இக்காலத்தில் இருந்தால் நீதியின் பிடியில் குற்றவாலிக்கூண்டில் இருந்திருப்பார்....

ஓஷோ கதைகளில் இதுவும் ஒன்று. அருமையான கதை இது. நான் நீதிபதி இடத்துக்கு சரியான ஆள் அல்ல; தவறான ஒரு ஆளை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். உங்கள் விருப்பம் அதுவானால் என்னால் என்ன செய்யமுடியும் என்று சொல்லி லாவோத்ஸுவும் ஒப்புக் கொள்கிறார். பின்னர் இந்த தீர்ப்புப்பற்றி அந்த பணக்காரன் அரசனிடம் முறையிடுகிறான். ”இவர் வினோதமாக நடந்து கொள்கிறார். நாளைக்கு அரசனாகிய உங்களையும் கூட குற்றவாளி என்று சொல்ல தயங்கமாட்டார்.” என்கிறான். நிலைமை மோசமாகும் முன்னே ஏதாவது செய்ய வேண்டுமென்று அரசன் லாவோத்ஸூவைச் சந்திக்கிறார். அதற்கு, அவர், “நான் தான் முன்னரே கூறினேன் அல்லவா? உண்மையில் என்னிடம் எந்த தவறும் இல்லை, உங்கள் ஆட்சிமுறையில் தான் தவறு. என்னால் தவறிழைக்க முடியாது.” என்று சொல்லி விலகிக் கொள்கிறார். அரசனால் அவர் செய்தது தவறு என்று சொல்ல முடியவில்லை.

Post a Comment