உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விபரமான ஆள்

1

Posted on : Sunday, January 27, 2013 | By : ஜெயராஜன் | In :

நமக்கு ஏற்கனவேதெரிந்த ஒரு விஷயத்தை ஒருவர் விளக்கப் போகிறார் என்றால் கொஞ்சம் பொறுமை காட்டுங்கள்.அவரைப் பேச விடுங்கள்.புதிதாகக் கேட்பது போலக் கேட்டுக் கொள்ளுங்கள்.இதில் இரு வசதிகள் உண்டு. முதலாவது, ஒரு விசயத்துக்கு எப்படியெல்லாம்,எங்கெங்கெல்லாம் கண், காது  ஓட்டலாம் என்பது தெரியவரும்.அடுத்து நமக்குத் தெரியாத பல புது கிளைச்  செய்திகளும் சேர்ந்தே வரும்.
ஒருவர் ஒரு விஷயத்தை ஆர்வமாகச் சொல்ல முன் வரும்போது எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வது நாகரீகம் அல்ல.அப்படியா என்று ஆர்வமாகக் கேட்டுக் கொள்வதுதான் மனிதாபிமானம்.மெல்ல அதில் சில சந்தேகங்களைக் கேட்டு அந்த ஆள் வெத்து வெட்டு என்று அவரையே உணர வைக்க நம்மால் முடியும் என்றாலும் அது வேண்டாம்.காரணம்,அவர்கள் அதன்பின் நம்மை வெறுக்கத் தொடங்குவர்.
ஒரு விவாதத்தில் இறங்கியிருக்கும் இருவர்,ஒருவரை ஒருவர் மட்டம் தட்டவே பார்க்கிறார்கள்.தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள்.இந்த விவாதம் மனக் கசப்பில்தான் முடியும்.எதிரியின் வாதம் அபத்தமாக இருந்தால் கூட எள்ளி நகையாட வேண்டாம்.'உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை'என்று பக்குவமாக சொல்லலாம் .அல்லது அவர்கள் வாதங்களிலுள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு இறுதியாக நம் கருத்துக்கு அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும்.'மடக்கி விட்டேன் பார்த்தாயா?'என்று காலரை தூக்கி விட்டுக் கொல்லும் தற்காலிகப் பெருமை நமக்குத் தேவையில்லை.
நாம் நம்மை விபரமான ஆளாகக் காட்டிக் கொள்ளும் சுபாவம் நம்மை இரு  விதத்தில் பாதிக்கிறது.ஒன்று,எதிராளி நம்மை அவமானப் படுத்த,பழி வாங்க சந்தர்ப்பம் தேட ஆரம்பித்து விடுவான்.இரண்டு,இது மற்றவர்களின் நல்லெண்ணத்தையும்,நன் மதிப்பையும் பெறத் தடையாயிருக்கிறது.குரலை உயர்த்திப் பேசுவதும்,மிக அதிகமாகப் பேசுவதும்,முகத்தில் ஏகமாகப் பிரகாசம் காண்பித்துப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும்.
நம்மை அப்பாவி என்று மற்றவர்கள் எண்ணுவதுதான் நமக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கித்தரும்.மற்றவர்களும் நம்மை விரோதப் பார்வை பார்க்க மாட்டார்கள்.
காரியத்தில் கண்ணாயிருந்து இறுதியில் புத்திசாலித்தனத்தைக் காண்பித்து வெற்றி கொள்வதை விட்டுவிட்டு 'நாம் புத்திசாலி'என ஒவ்வொரு கட்டத்திலும் காண்பித்துக் கொள்வது எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கி விடும்.
                                                          --லேனா தமிழ்வாணன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

Informative!

Post a Comment