உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மன்னவனே அழலாமா?

2

Posted on : Thursday, October 25, 2012 | By : ஜெயராஜன் | In :

அழுவது தவறு என்றும் குறிப்பாக ஆண்கள் அழுவது ஆண்மைக்கு இழுக்கு என்றும் சிறு வயதிலிருந்து நாம் சொல்லிக் கொடுக்கப்பட்டு அதைக் கடைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.அழலாமா,கூடாதா?முக்கியமான நேரங்களில் உணர்ச்சிகளை அடக்கி வைக்காமல் அழுது  தீர்த்து விட்டால் மனதுக்கு அமைதி கிடைக்கும்.ஏதாவது முக்கியமான செய்திகளைக் கேட்கும்போது உடலும் மனதும் பதற்றப்படும்.அப்போது இரத்தக் கொதிப்பு ஏற்படாதிருக்க அழுது விடுவதே சிறந்தது.அழும்போது மன இறுக்கம் அகலும்.அழும்போது ஹார்மோன்கள் செயல்பட்டு தசைகளை டென்சன் இல்லாமல் ஆக்கி கவலைகளை துரத்தி விடுகின்றன.நடுநிலையுடன் உணர்வுக்கு அமைதி கிட்டுவதால் பிரச்சினைகளை மீண்டும் எதிர்த்து சமாளித்து வெற்றி பெற மனதில் வைராக்கியம் தோன்றும்.குரல் விட்டு அழுவதால் அகப் பண்பு விருத்தியாகி தைரியம் பிறக்கிறது.உடலில் நோய் உள்ளவர்களும் துன்பத்தில் உழல்பவர்களும்  மனம் விட்டு இறைவனிடம் அழுகிறார்கள்.அப்போது அவர்களுக்கு உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றங்கள் உண்டாகின்றன என்று மனோதத்துவ மருத்துவர்கள் கூறுகிறார்கள்.அழுவதால் ஒருவருக்கு மன தைரியம் இல்லை என்று அர்த்தம் இல்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

அழுகையில் இருக்குது ஆறுதல்.
நல்ல பதிவு

உண்மை தான்... நன்றி...

இன்ட்லி Follower Gadget விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்... (http://www.bloggernanban.com/2012/10/blog-post.html) அதே போல் இன்ட்லி ஓட்டுப்பட்டையையும் எடுத்து விடவும்... தளம் திறக்க நேரம் ஆகிறது...
நன்றி...

Post a Comment