உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

போருக்கான செலவு

3

Posted on : Saturday, December 08, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒப்புயர்வற்ற விண்வெளி அறிவியல் நிபுணரும் எழுத்தாளருமான கார்ல் சாகன் சொல்கிறார்,''மனித சமூகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள  வில்லை  என்றால்,மனித இனத்திற்கு புதிய வாய்ப்புகளும்,மகிழ்ச்சிகரமான அனுபவங்களும் எப்போதும் கிடைக்கும்,''ஆனால் இன்று ஒவ்வொரு நாடும் போருக்காக செய்யும் செலவுகள் ,சமூகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வழிவகை செய்வதாகவே இருக்கிறது.. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் போருக்காக செலவிடப்படும் பணம் கிடைக்குமானால், அதைக் கொண்டு மனித இனம் முழுமைக்கும் கீழ்க்கண்ட நலன்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
*இரண்டு கோடி படுக்கைகள் கொண்ட முப்பதாயிரம் மருத்துவ மனைகள் கட்ட முடியும்.
*நாற்பது கோடி குழந்தைகள் படிப்பதற்கு ஆறு லட்சம் பள்ளிகள் திறக்க முடியும்.
*இரண்டு கோடி மனிதர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கக்கூடிய இருபதாயிரம் தொழிற் சாலைகள் தொடங்க முடியும்.
*முப்பது கோடி மக்களுக்கு வேண்டிய ஆறு கோடி குடியிருப்பு மனைகளைக் கட்டிக் கொடுக்க முடியும்.
*நூறு கோடி மக்களுக்கு வேண்டிய உணவு தானியங்களை உற்பத்தி செய்யலாம்.
இதைப்பற்றி யார் சிந்திக்கப் போகிறார்கள்?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

arumaiyaana thakavalkal...

ஒப்புயர்வற்ற விண்வெளி அறிவியல் நிபுணரும் எழுத்தாளருமான கார்ல் சாகன் சொல்கிறார்,''மனித சமூகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வில்லை என்றால்,மனித இனத்திற்கு புதிய வாய்ப்புகளும்,மகிழ்ச்சிகரமான அனுபவங்களும் எப்போதும் கிடைக்கும்,''

கஷ்ட்டப்பட்டு செலவு செய்து துன்பத்தை பெறுகிறார்களே!!

சீனி,இராஜராஜேஸ்வரி,பகவான்ஜி,அனைவருக்கும் எனது நன்றிகள்.

Post a Comment