உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சூபி சிந்தனைகள்

0

Posted on : Thursday, August 19, 2010 | By : ஜெயராஜன் | In :

மனம் என்ற ஒன்று நம்மிடம் உள்ளவரை மனதில்,'நான்'என்பது இருக்கும்.அந்த நான் என்ற உணர்வானது ஒவ்வொன்றையும் தனக்கு விரும்பிய விதத்தில் தான் கற்பனை செய்யும்.நிஜமான உண்மை அந்தக் கற்பனைக்கு முரணானது என்று தெரியும் நிலையில்,மனம் உண்மையைத்தான் தூக்கி எறியுமே தவிர,தனது கற்பனைகளை விட்டுத்தரவே  செய்யாது.உள் மனதிற்கு உண்மை என்ன என்று  தெரியும்.ஆனால் புற மனம் உண்மையை மறைப்பதற்கு வழி கிடைக்காதா என்று ஏங்கும்.
**********
குழந்தைகள்எதைக்கண்டாலும்குதூகலப்படுகின்றனர்.பரவசமடைகின்றனர். காரணம்,அவர்களின் மனதில்எதைப் பற்றிய கற்பனைகளும் இல்லை.அவர்கள் நிஜத்தை நேரிடையாக எதிர் கொள்கின்றனர்.நாம் ஒன்றைப் பற்றிக் கேள்விப்படும்போதே,நமது மனம் அது பற்றி அதீதக் கற்பனைகள் செய்யத் துவங்கி விடுகிறது.அதனால்,அதன் பின்னர் நேரில் பார்க்கும்போது அது எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும்,நம் மனதால், நிறைவை அடைய முடிவதில்லை.
**********
பணம்,பொருள்,புகழ்,இவற்றை அடையும் வேட்டை,ஆயுள் முழுவதும் தொடர்கிறது.ஆனால் இவற்றை அடையும் வரை இருந்த வேகம்,அடைந்தபின் அவனிடம் வடிந்துபோய்,அப்படி அடைந்தவற்றின் மீது ஒரு சலிப்பு கூட ஏற்படுகிறது.
**********
ஞானம் பெற்றபலரும் ஆலயங்களிலோ,வழிபாட்டுத் தளங்களிலோ,அன்றாடம் தொழும் பக்திமானாக இருந்தது இல்லை.ஆலயப்பணி,இறைவன்தொண்டு என்றெல்லாம் ஈடுபடும் பலரிடம் உள்ளூர ஊடுருவிப் பார்த்தால்,அகந்தை கொப்பளிக்கக்  காணலாம். தாங்கள்  புனிதமானவர்கள் என்ற செருக்கு இவர்களுடன் சேர்ந்து கொண்டு விடுகிறது.இயற்கை என்றுமே மனிதனின் புறச் சூழ்நிலைகளைப் பார்ப்பதில்லை.அவன் மனதை மட்டுமே பார்க்கிறது.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment