உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இகழ்ச்சி

0

Posted on : Saturday, August 21, 2010 | By : ஜெயராஜன் | In :

தமிழில் முதல் நாவலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.அவரிடம் பணம் பெறும் பொருட்டு அவரைப் பார்க்க வந்த ஒரு புலவர் அவரைப்  பார்த்து,
,''அருங்கிரியே,கற்பகமே,காளையே,அனந்தனே,அரியே!''என்று புகழ்ந்தார். அவனுடைய நோக்கத்தைப் புரிந்து கொண்ட பிள்ளை அவர்கள் அவன் சொன்ன வார்த்தைகளை அலங்காரம் ஏதுமில்லாமல்அவனைப்பார்த்து  திரும்பச் சொன்னார்.ஆனால் அந்த புலவர் மிகுந்த கோபத்துடன் வெளியேறிவிட்டார்.அப்படி அவர் என்ன தான் சொல்லி விட்டார்?
புலவர் அருங்கிரியே என்றார்.அதாவது அருமையான மலை போன்றவனே.கற்பகமே என்றார்.அதன் பொருள் நினைத்ததைத்தரும்  கற்பக மரத்தைப் போன்றவனே என்பதாகும்.சிவனின்வாகனம் காளை.எனவே காளை போன்ற ஆற்றல் உடையவனே என்று புகழ்கிறார்.அனந்தன் என்பது திருமால் அமர்ந்திருக்கும் ஆதிசேடன்  ஆகும். அரி என்றால் சிங்கம்.சிங்கம் போன்றவனே என்று சொல்கிறார்.
சரி,வேதநாயகம் பிள்ளை என்ன சொன்னார்?இதோ அவரது பாடல்.
அருங்கிரியே!கற்பகமே! காளையே!
அனந்தனே!அரியே!என்ன
ஒருங்கு நமையே  புகழ்ந்து பொருள்கேட்ட 
ஒருவனை யாம் உற்று நோக்கி
இருங்கல்லே!மரமே!மாடே!பாம்பே!மிருகமே!
என்றோம்;காய்ந்தான் 
மருங்க வன் வார்த்தையைத் திருப்பி நான் சொன்னால்,
அவனுக்கு ஏன் வருத்தம் அம்மா?
 புலவர் அருமையான மலை என்றார்.மலை என்பது கல்தானே.கற்பகம் ஒரு மரம்தானே!காளை என்பது மாடு தானே!அனந்தன் என்பது பாம்பு தானே! சிங்கம் ஒரு விலங்கு தானே.எனவே புலவர் சொன்னதையே திருப்பி,''கல்லே,மரமே,மாடே,பாம்பே,மிருகமே,''என்று சொன்னபோது அவர் கோபம் கொண்டார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment