உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மனசாட்சி

1

Posted on : Friday, August 13, 2010 | By : ஜெயராஜன் | In :

முன்பெல்லாம் யார் யாரை ஏமாற்றிக் கொண்டு இருந்தாலும்,அநியாயம் இழைத்துக் கொண்டிருந்தாலும்,அவனவனுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது,அதனுடைய உறுத்தல் விடாது.அதையே ஒரு ஆறுதலாக,தேறுதலாகச் சொல்வதுண்டு.கடவுள் எங்கும் நிறைந்திருக்கும் முறை,அவனவன் மனதையே அவனவனுக்கு சாட்சியாக நிறுவியிருப்பதுதான்.மனசாட்சிப்படி கேட்கிறானோ இல்லையோ,அவன் எண்ணத்தின்,செய்கையின்,நியாய,அநியாய உணர்வைத் தப்ப முடியாது.அந்த உணர்வே தான் ஆண்டவன்.
வரவர நடப்பைப் பார்த்தால்,மனசாட்சியே கொல்லப்பட்டு விட்டதோ அல்லது அதன் குரல் எட்டாத ஆழத்தில் புதைக்கப்பட்டு விட்டதோ என்று திகைப்பாய் இருக்கிறது.அதனாலேயே மனோதைரியம் கலகலத்துப் போய்விடுகிறது.
அல்லது வீசை,பலம்,கிலோகிராம்,கிராமாகவும் ;படி ,ஆழாக்கு,லிட்டர் மில்லியகவும் மாறி விட்டாற்போல் நியாயத்துக்கும் எடை மாறிவிட்டதா,சாஸ்திர எடையிலிருந்து சமுதாய எடையாக?காலத்தின் மேல் பழியைப் போட்டுக்கொண்டு,சௌகர்யம் தான் நியாயம் என்ற புது எடையில்,நியதிகளை மாற்றிவிட்டதோ?
                                                     லா.ச.ரா.எழுதிய சிந்தா நதி எனும் நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

மனசாட்சி என்பது நம்முடையது அல்ல. நாம் குழந்தையாக இருக்கும் போது இந்த சமுதாயத்தால் கொடுக்கப்பட்ட; இது சரி, இது தவறு என்று வரையறையறுக்கப்பட்டு தொகுக்கப்பட்டவைகளின் திணிப்பு தான் என்று ஓஷோ சொல்லுவார்.

///மனசாட்சிப்படி கேட்கிறானோ இல்லையோ,அவன் எண்ணத்தின்,செய்கையின்,நியாய,அநியாய உணர்வைத் தப்ப முடியாது.அந்த உணர்வே தான் ஆண்டவன்./// இந்த வரிகளை நான் மிகவும் ரசிக்கிறேன். நல்ல பகிர்வு. நன்றி.

Post a Comment