உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

படுக்கை

0

Posted on : Tuesday, August 31, 2010 | By : ஜெயராஜன் | In :

கடலில் கப்பல் போய்க் கொண்டிருந்தது.திடீரென வந்த புயல் கப்பலை  பலமாக ஆட்டியது.பயணிகள் அனைவரும் பயந்து கூக்குரலிட்டனர்.ஆனால் கப்பலின் கேப்டன் மட்டும் எந்த சலனுமுமின்றி தன வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.பயணிகள் அவனைப்  பார்த்து,''உனக்கு பயமாய் இல்லையா?'' என்று கேட்டனர்.
கேப்டன்: பயமா?எனக்கா? என் தந்தை  ,என் பாட்டனார்  அனைவரும் கடலில்தான் இறந்தார்கள்.
பயணி:உன் குடும்பத்துக்கு சாவைக் கொடுத்த இந்தக் கடலைப் பார்த்து உனக்கு பயமில்லையா?
கேப்டன்:எதற்காகப் பயப்பட வேண்டும்.எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தானே?உன் தந்தைஎங்கு இறந்தார்?
பயணி: என் தந்தை படுக்கையில் தான் இறந்தார்.
கேப்டன்:அப்படியானால் உனக்கு படுக்கையைப் பார்த்தால் பயம் இல்லையா?
பயணி: இல்லை.படுக்கை பாதுகாப்பான இடமாயிற்றே.
கேப்டன்:இருக்கலாம்.கடவுள் இல்லாத இடமே கிடையாது.அவர் அருள் கடலிலும் இருக்கலாம்;படுக்கையிலும் இருக்கலாம்.உன் தந்தை படுக்கையில் இறந்தும் கூட உனக்கு படுக்கையைப் பார்த்து பயமில்லை என்றால் எனக்கு ஏன் கடலைப் பார்த்து பயம் ஏற்படப் போகிறது?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment