உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நிதானம்

5

Posted on : Wednesday, November 21, 2012 | By : ஜெயராஜன் | In :

எத்தனை முறை அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்கிறோம்!அதற்கான தண்டனையை எத்தனை முறை அனுபவித்திருக்கிறோம்!ஆனாலும் நாம் சாமானியமாய் மாறுவதில்லை.எந்த ஒரு பிரச்சினையானாலும் அதற்கு முரட்டுத்தனமான தீர்வையே முதலில் மேற்கொள்கிறார்கள்,சில பேர்.வேறு வழியே இல்லாவிடில் கடைசி பாணமாக அதை வைத்துக் கொள்ளலாம் என்று ஏனோ அவர்களுக்குத் தெரிவதில்லை.
ஒரு பிரச்சினை வந்ததுமே அதைத் தீர்க்க என்னென்ன வழியெல்லாம் உண்டு என்று சிந்திக்கத் துவங்குபவனே புத்திசாலி.ஒவ்வொரு வழியையும் தீர ஆலோசித்து அது எப்படி முடியும் என மறுப்பு அசை போட்டு கடைசியில் எது சிறந்த வழியோ அதையே நடைமுறைப் படுத்த வேண்டும்.
உடலில் கொசு உட்கார்ந்ததும் அதைப் பட்டென்று அடிப்பதுபோல ஒவ்வொரு விசயத்திலும் முடிவு எடுத்தால் வரும் தொல்லை முன்னிலும் பலம் அதிகரித்து இருக்கும்.பிரச்சினைக் கோட்டையிலிருந்து வெளிவர ஒரே வழிதான் என்று நம்புபவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.நான்கு புறங்களிலும் வழிகள் இருக்கின்றன.அவற்றுள் எது ஆபத்துக் குறைவான வழியோ அதைத்தான் யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
மிக எளிதாக இருக்கிறதே என்று பலர் ஆபத்தான வழிகளைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.சற்றே சுற்றிப் போனாலும் பரவாயில்லை என்று நிதானத்தைக் கடைப் பிடிக்க வேண்டியது அவசியம்.
பரபரப்பு அடைவதாலும் அவசரப் படுவதாலும் ஒரு வேலையும் ஆவதில்லை. அப்படி தப்பித்தவறி ஆகிற வேலையும்  அபத்தமாகவோ, ஆபத்தனமானதாகவோதான் இருக்கும்.இந்தப் பரபரப்பிலும் குழப்பத்திலும் இருப்பவர்கள்தான் 'எனக்கு ஒன்றும் புரியவில்லை,''என்றும்,'எனக்குக் கையும் ஊட வில்லை,காலும் ஓடவில்லை'என்றும் புலம்புகிறார்கள்.இது கூடத் தேவலை சிலர் நிதானத்தை இழக்கும்போது நாம் என்ன செய்கிறோம்,என்ன சொல்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறார்கள்.
தோன்றியதைச் செய்துவிடுவோம்,.அப்புறம் வருவது வரட்டும் என்கிற மன நிலையும் தவறு.எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் செயலாலும் சொல்லாலும் நிதானத்தை இழந்து விடக் கூடாது.நிதானத்தை இழக்காதவர்கள்,மற்ற அனைத்தையும் காப்பாற்றத் தெரிந்தவர்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (5)

பிரச்சினைக் கோட்டையிலிருந்து வெளிவர ஒரே வழிதான் என்று நம்புபவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.நான்கு புறங்களிலும் வழிகள் இருக்கின்றன
////////////////////

அழகான கருத்து..
நிஜம்

நல்ல கருத்துக்கள்...

தானத்தில் சிறந்த தானம் : நிதானம்... இருந்தால் எப்போதும் சமாதானம்...

This is indeed a wonderful article Mr. Rajan. Had I read this a month back, it would have helped me a lot. Anyways, better late than never. I had a big confusion for the past two months and this article precisely gave the solution for the problem. Thanks again Sir.

சிட்டுக் குருவி,தனபாலன்,நன்றி.அம்முத்தளிப் அவர்களுக்கு இந்த இடுகை உபயோகமாய் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி.இதை எழுதியவருக்கு நன்றிகள்.

நிதானமாக இருக்கனும்னுதான் நினைக்கிறேன். இந்த பொம்பளைங்க விடமாட்டேன்க்ராங்க ..என்ன செய்கிறது சார்?
-சரவணபவா USA

Post a Comment