உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெரியுமா?-2

2

Posted on : Wednesday, March 20, 2013 | By : ஜெயராஜன் | In :

கருணைக் கிழங்கில் உள்ள கால்சியம் ஆக்ஸலேட் தான் நாக்கு அரிப்பதற் கான  காரணம்.
******
இந்தியாவில் முதல் முதலாக துவங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனம்;DAMODAR VALLEY CORPORATION.
******
மிகக் குறைந்த காலத்தில் சுதந்திரம் அடைந்த நாடு பங்களா தேஷ் தான். மக்கள் அதற்காகப் போராடியது ஒன்பது மாதங்கள் மட்டுமே,
******
குளிர்ச்சியான கிரகம் புளுட்டோ.
******
ஹாலி வால்நட்சத்திரம் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது.
******
சுதந்திரத்திற்குப் பின் மொழி வழி அடிப்படையில் அமைந்த முதல் மாநிலம் ஆந்திரா.
******
வங்கக் கடலில் கலக்காத நதி தப்தி.
******
இந்தியாவின் தேசியக் கோடியை உருவாக்கியவர் விஜயவாடாவை சேர்ந்த பிஸ்கலி வெங்கையா என்பவர்.
******
கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயம்.
******
எந்த ஒரு புத்தகத்தின் இடது பக்க எண்ணும்  இரட்டைப் படை எண்ணாகத்தான் இருக்கும்.இதற்கு VERSO என்று பெயர்.வலது பக்க எண்கள் ஒற்றைப் படை எண்ணாக இருக்கும்.அதற்கு TECTO என்று பெயர்.
******
மலேரியா என்ற சொல் இத்தாலியிலிருந்து வந்தது.இத்தாலிய மொழியில் மலா என்றால் சதுப்பு நிலம்.ஏரியா என்றால் கெட்ட காற்று.கெட்ட காற்றினால்தான் இக்காய்ச்சல் வருவதாக அவர்கள் நம்பியதால் இப்பெயர் வந்தது.
******
மனிதன் கண்களால் காணும் காட்சிகளில் நூறில் ஒரு பங்குதான் மூளையில் பதிகிறது.
******
ஆங்கில மொழியில் அதிக அர்த்தங்கள் கொண்ட சொல் 'SET' என்பதாகும்..NOUNஆக 58 அர்த்தங்கள்.VERB ஆக 126அர்த்தங்கள்.ADJECTIVE ஆக 10அர்த்தங்கள் உள்ளன.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

சிலவற்றை இப்போது தான் அறிந்து கொண்டேன்... நன்றி சார்...

மிகக் குறைந்த காலத்தில் சுதந்திரம் அடைந்த நாடு பங்களா தேஷ் தான். மக்கள் அதற்காகப் போராடியது ஒன்பது மாதங்கள் மட்டுமே,
பங்களா தேஷ் உருவாக காரணம் ,நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்திசெய்த உதவிதான் !நமது ஈழ மக்களின் துயரங்களைப் போக்க ஒரு இந்திரா காந்தி இல்லையே என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது !

Post a Comment