உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

களைப்பு

0

Posted on : Tuesday, May 04, 2010 | By : ஜெயராஜன் | In :

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,ஒருமுறை காரில் தன நண்பர்களுடன்  ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார்.போகும் வழியில் கார் ஒரு புளிய மரத்தில் மோதி  விபத்து ஏற்பட்டது.கார் நசுங்கி அனைவருக்கும் காயம். கலைவாணர் கொஞ்சம் கூடப் பதட்டப் படாமல் அனைவருக்கும் முதலுதவி செய்ய ஏற்பாடு  செய்தார்.ஒருவரை பக்கத்து ஊருக்கு அனுப்பி ஒரு வாடகைக் கார் பிடித்து வரச் சொன்னார்.புளிய மரத்தடியில் ஒரு விரிப்பை விரித்து எல்லோரையும் உட்காரச் சொன்னார்.வெற்றிலை போட்டுக் கொண்டே எல்லோருடனும் சாதாரணமாகச் சிரித்துப் பேச ஆரம்பித்தார்.
அப்போது அந்த வழியே சென்ற சிலர் கலைவாணரை அடையாளம் கண்டு பதட்டத்துடன் வந்து விபத்து பற்றி விசாரித்தனர். அவருக்கு காயம் ஏற்பட்டது குறித்து கவலை தெரிவித்தனர்.கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்னார்,''ஒன்னுமில்லீங்க.எல்லோருக்கும் களைப்பாய் இருந்தது.எனவே வண்டியை மரத்தில் சாத்தி வைத்து விட்டு நாங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.''அந்த நிலையில் வேறு யாராலும் இப்படி நிதானமாகப் பேச முடியுமா?அது தான் கலைவாணர்!

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment