மார்க்கஸ் அரேபியஸ் என்ற அரசன் பெரிய ஞானி.ரோமை ஆண்டவன்.எந்தப் பிரச்சினையைப் பற்றியும் யாருடைய நடத்தையைப் பற்றியும் எப்போதும் பதட்டம் அடைய மாட்டான்.அவன் தன நாட்குறிப்பில் எழுதியிருந்தது.:
''நான் இன்றைக்கு சுயநலம் படைத்தவர்களையும் ,வெட்டித்தனமாகப்பேசுபவர்களையும் ,தற்பெருமை பேசுபவர்களையும்,நம்பிக்கை மோசடி செய்பவர்களையும் ,நன்றியில்லாத மக்களையுமே பெருமளவில் சந்திக்கப் போகிறேன்.அவர்களைப் பார்த்து நான் ஆச்சரியமோ,கலவரமோ அடையப் போவதில்லை.இம்மாதிரியான மனிதர்கள் இல்லாத உலகை என்னால் கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடிய வில்லை.''
இவ்வாறு, தான் எழுதி வைத்திருந்ததைத் தினமும் படித்து விட்டுத்தான் அரசவைக்குச் செல்வான்.எப்படிப்பட்ட மனிதனைச் சந்தித்தாலும் ,பொறுமையாக நிதானம் தவறாமல் இருந்து பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து தீர்த்து வைப்பான்.
|
|
Post a Comment