உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அற்பப்பிறவி

0

Posted on : Tuesday, October 20, 2009 | By : ஜெயராஜன் | In :

வியாச முனிவர் காட்டுச்சாலை ஒன்றில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு புழு சாலையை விரைந்து கடப்பதை பார்த்து காரணம் கேட்டார் .''தூரத்தில் ரதங்கள் வருவது நில அதிர்வின் மூலம் தெரிந்து கொண்டேன். அதில் சிக்கி இறந்து விடாதிருக்க விரைகிறேன்.''என்றது அப்புழு.''நீ ஒரு சாதரண புழு. நீ ஏன்இவ்வளவு பயப்படுகிறாய்? நீ வாழ்வதால் யாருக்கு என்ன பயன்?இறந்தால் தான் என்ன நஷ்டம்? ''என்று கேட்டார் வியாசர்.
அப்புழு சொன்னது ''அய்யா,உலக பிறப்புகளில் எதுவும் அற்பம் கிடையாது.ஏதோஒரு காரணத்திற்காக நான் படைக்கப்பட்டுள்ளேன். நீங்களும் படைக்கப்பட்டுள்ளீர்கள். படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்திற்குமே அதன் உயிர் மேல் ஆசை இருக்கும். ''
'' என்னையும் உன்னையும் இணைத்துப்பேசாதே.நீ ஒரு அற்பப்பிறவி.''என்றார் வியாசர்.
'' மனிதப்பிறவி எடுத்த உமக்குநான்அற்ப பிறவியாக தெரிவேன்.தேவர்கள் கந்தர்வர்களுக்கு நீர் அற்பமாகத்தெரிவீர்.சிறிய பூச்சிகள் எனக்கு அற்பமாகத் தெரியும்.''என்று புழு கூற அசந்து விட்டார் வியாசர்.
புழு மேலும் கூறியது,''புழுவாகிய எனக்கு உள்ள சுக துக்கங்கள் சந்தோஷங்கள் மனித பிறவி எடுத்த உமக்கு ப்புரியாது.பன்றிகளுக்கு சேற்றில் புரள்வது சுகம்.எருமைக்கு நீரில் இருப்பது சுகம்.இந்த புழு பிறவிக்கென்று இறைவன் படைத்த சந்தோஷங்களைஎல்லாம்அடைந்த பிறகே இறக்க விரும்புகிறேன்.இதை தடுக்க யாருக்கும் உரிமையில்லை.''
வியாசர் மெளனமாக அந்த புழுவின் வார்த்தைகளை ஆமோதித்தார்.புழு விரைவாக சாலையைக் கடந்து மறுபுறம் சென்றது.
யாரையும் அற்பமாக நினைக்கக்கூடாது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment