உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கணக்கு தீர்ந்தது.

2

Posted on : Thursday, September 06, 2012 | By : ஜெயராஜன் | In :

புத்தரைப் பார்க்க வந்த ஒருவன் திடீரென அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான். புத்தரும் முகத்தைத் துடைத்தவாறு,''அப்பனே,வேறு என்ன சொல்ல விரும்புகிறாய்?''என அமைதியாகக் கேட்டார்.அவனுடைய அவமாரியாதைக்கு  எதிர் செயல் ஏதும் இல்லாது அவர் முகம் அமைதியாக இருப்பதைக் கண்ட அவனுக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது.அவன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி விட்டான்.அன்றிரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை அவன் கொடுத்த அவமரியாதை அவனுக்கே திரும்ப வந்து விட்டதாய்  அவன் உணர்ந்தான்.நடந்ததை  அவனால் நம்ப முடியவில்லை.நீண்ட யோசனைக்குப் பின் தன்  தவறை அவன் உணர்ந்தான்.மறு நாள் அவன் நேரே புத்தரிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.புத்தர் சொன்னார்,''அதைப் பற்றி கவலைப் படாதே.இதற்கு முன் எப்போதோ உனக்கு ஏதோ தீங்கு நான் இழைத்திருக்க வேண்டும்.இப்போது அந்தக் கணக்கு சரி செய்யப்பட்டு விட்டது.அதனால் நீ செய்ததற்குப் பதிலாக  ஏதும் செய்யப் போவதில்லை. நான் ஏதேனும் பதிலுக்கு செய்தால் நம் கணக்கு முடியாது தொடர்ந்து கொண்டே போகும்.நான் கணக்கை முடித்து விட்டேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

என்னவொரு அருமையான கருத்து... நன்றி சார்...

மறுநாள் புத்தரிடம் சென்று மன்னிப்பு கேட்டன்.அதற்க்கு புத்தர் சொன்னார்.."நேற்றே நான் இறந்து விட்டேன்.இன்னுமா அதை நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று.
இப்படியும் நான் படித்துளேன். உங்கள் படைப்பு அருமை சார்.---சரவணபவா, பாஸ்டன்.

Post a Comment