உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

என்ன அதிசயம்?

1

Posted on : Monday, April 15, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் மூன்று எண்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அந்த மூன்று எண்களைக் கொண்டு ஒரு மூன்றிலக்க எண்ணை உருவாக்கிக் கொள்ளுங்கள்.இது'அ'
அந்த எண்ணை திருப்பி எழுதுங்கள்.இது 'ஆ'
'அ','ஆ' இவற்றுள் பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.இது 'இ'.
'இ'யைத் திருப்பி எழுதுங்கள்.இந்த எண் 'ஈ'
இப்பொழுது 'இ'யையும்,'ஈ'யையும் கூட்டுங்கள்.
வரும் விடை 1089 தானே?இதில் என்ன விசேசம் என்று கேட்கிறீர்களா?ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் எந்த மூன்று எண்களைத் தேர்வு செய்து இவ்வாறு செய்தாலும்.விடை 1089 தான் வரும்.
உதாரணமாக,1,2,7 என்ற மூன்று எண்களைத் தேர்வு செய்து கொள்வோம்.
'அ'=127
'ஆ'=721
'அ'-'ஆ'=721-127=594
'இ'=594
'ஈ'=495
'இ'+'ஈ'=594+495=1089
ஏதாவது மூன்று எண்களைத் தேர்வு செய்து முயற்சி செய்து பாருங்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

குழந்தைகளிடம் சிறிது விளையாட ஒரு விசயம் கிடைத்து விட்டது... நன்றி... (இது தான் தெரியுமே என்று குழந்தைகள் சொல்லாமல் இருந்தால் சரி... ஹிஹி)

Post a Comment