ஒரு மனிதன் வேகமாக காவல் நிலையத்துக்குள் நுழைந்து,,''சார்,சற்று நேரத்துக்குமுன் ஒரு அயல் கிரக வாசியைப் பார்த்தேன்.அவன் எங்களைத் தாக்க வந்தான்.''என்று படபடவென சொன்னான்.அதிகாரி நடந்தவிஷயங்களை விளக்கமாகக் கூறச்சொன்னார்.அவன் சொன்னான், ''நான் என் மாமியாருடன் நடந்து வந்து கொண்டிருந்தேன்.திடீரென அந்த அயல் கிரகவாசி என் மாமியாரைப் பிடித்துக் கொண்டான்.எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இங்கு ஓடி வந்தேன்.''காவல் அதிகாரி,''அடையாளம் ஏதேனும் சொல்ல முடியுமா?''என்று கேட்க அவன் சொன்னான்,''நல்ல கனத்த உருவம்.தலை முடி சடை சடையாக இருக்கும்.பல் மூன்று வெளியே துருத்திக் கொண்டிருக்கும்.கூன் விழுந்திருக்கும்...''அதிகாரி,''அயல் கிரகவாசி அவ்வளவு பயங்கரமாகவா இருந்தான்?''என்று கேட்க,அவன் சொன்னான்,''ஹி,ஹி,...நான் என் மாமியாரைப் பற்றி சொன்னேன்.''
|
|
Post a Comment