அமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார்.அவருடைய நண்பர் ஒருவர் இருந்தார்.அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது.எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு.ஒரு நாள் அவர்,''நண்பரே,உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே,உமதுமனைவியையும் பொதுஉடைமை ஆக்கச் சம்மதிப்பீரா?'' என்று கேலியாகக் கேட்டார்.உயிருள்ள தன மனைவியை ஒரு பொருளுடன் ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை.எனினும் தன நண்பரின் வாயடைக்க விரும்பினார்.அவர் நண்பரிடம் கேட்டார் ,''தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர்,உமக்கு உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா?''நண்பர் வாயைத்திறக்கவில்லை.
|
|
Post a Comment