உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விழுந்த பல்

3

Posted on : Monday, April 21, 2014 | By : ஜெயராஜன் | In :

விழுந்து போன பல்லைக் கூட
விழுந்து கும்பிட வேண்டுமென்றால்,
பல் புத்தனுடையதாக இருக்க வேண்டும்.
******
நேற்று என்பது வெட்டி எறிந்த நகம்,
நாளை என்பது வெளுக்கப் போகிற கறுப்பு முடி.
******
ஓடுகிற வரை நீ நதி.
நின்றால் குட்டை!
******
வெந்த சோறே மனிதனுக்கு செறிப்பதில்லை.
குருவியின் குடல்,நெல்லைக் கூட அரைத்து
நீராக்கி விடுகிறது.
******
மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்காக
நீ கவலைப்பட்டால்,
தாயக்கட்டைகளே,
தாண்ட முடியாத மலைகளாகிவிடும்.
உனது அபிப்பிராயங்களுக்காக
மற்றவர்கள் கவலைப்பட்டால்
நிலவே உனக்கு நெற்றிப் போட்டாகும்.
******
உப்பு,செத்தவற்றைப் பாதுகாப்பதற்காக
உபயோகப்படுத்தப்படுகிறது.
அதை உயிரோடிருப்பவர்கள்
சேர்க்கிறோமே ஏன்?
******
பத்துமுறை கீழே விழுந்தவனைப்
பூமி முத்தமிட்டுச் சொன்னது ''நீ
ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா?''என்று.
******
குழந்தைகளை அடிகிறவர்கள்
தண்டனைக்குத் தப்பி விடுகிற கொலைகாரர்கள்.
******
மிருகங்கள் குழந்தைகளை அடிப்பதை
நான் ஒருபோதும் பார்த்ததில்லை.
நீதான் கோழி மிதித்து
குஞ்சு சாவதில்லை என்று
கோழிக்கே சொன்னவன்.
******
கோவில்கள் அதிகமாகி விட்டால்
எங்கே குடியிருப்பது என்ற சங்கடம்
இறைவனுக்கே வந்துவிடும்.
ஆகவேதான் பல இடங்களில்
ஆலயங்கள் இருக்கின்றன.
ஆண்டவன் மாத்திரம் இல்லை.
******
              ---வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் எழுதிய ''எல்லா ராத்திரிகளும் விடிகின்றன''என்ற நூலிலிருந்து.தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

ஒன்பது முறை எழுந்தவன் உட்பட அனைத்தும் அருமை...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

வலம்புரி ஜான்அவர்களின் கவிதைகள் ,அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால் ...அந்தக இரவில் சந்தன மின்னல்களாய் ஜொலிக்கின்றன ,,ரசித்தேன் !

Post a Comment