உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உனக்கென்ன வேலை?

4

Posted on : Wednesday, July 31, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஆத்மா கடவுளிடம் கேட்டது,''நான் குழந்தையாய்ப் பிறக்க வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''பிறந்து கொள்,''
பிறந்த குழந்தை கடவுளிடம் கேட்டது,''நான் வளர வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''வளர்ந்து கொள்.''
வளர்ந்த குழந்தை கேட்டது,''நான் படிக்க வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''படித்துக் கொள்.''
படித்த பையன் கேட்டான்,''எனக்கு நல்ல வேலை வேண்டுமே?''
கடவுள் சொன்னார்,''தேடிக் கண்டுபிடி,''
வேலையில் சேர்ந்த இளைஞன் கேட்டான்,''எனக்கு திருமணம் செய்ய வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''நல்ல பெண்ணாய்ப்பார்த்து திருமணம் செய்துகொள்.''
திருமணம் ஆனதும் கேட்டான்,''நல்ல குழந்தை வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''பெற்றுக் கொள்.''
வயதானபின் அவன் கேட்டான்,''நான் நல்ல படியாக இறக்க வேண்டுமே,''
கடவுள் சொன்னார்,''இறந்து கொள்.''
அவன் வெகுண்டு கடவுளிடம் கேட்டான்,''ஆரம்பத்திலிருந்து எல்லாமே நீயே செய்துகொள் என்றே கூறி வருகிறாய்.அப்புறம் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் உனக்கு என்னதான் வேலை?''
கடவுள் புன்னகையுடன்  சொன்னார்,''இத்தனையிலும் உனக்கு ஏற்பட்ட அனுபவம் இருக்கிறதே அதுதான் நான்.''


தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (4)

இதே கண்ணதாசன் அவர்களின் வரிகளிலும்...

அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

தொடர்பதிவு :

http://jokkaali.blogspot.com/2013/07/blog-post_998.html

தொடர வாழ்த்துக்கள்...

தொடர் பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன் ....http://jokkaali.blogspot.com/2013/07/blog-post_998.html

கடவுள் புன்னகையுடன் சொன்னார்,''இத்தனையிலும் உனக்கு ஏற்பட்ட அனுபவம் இருக்கிறதே அதுதான் நான்.''

அனுபவம் என்பதே நான் தான் என்பது கடவுள் சொன்ன மொழி...!

Post a Comment