உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நான் இங்கே...

2

Posted on : Monday, March 31, 2014 | By : ஜெயராஜன் | In :

ஏழை பக்தன் ஒருவன் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் திருப்பதி சென்று வர வேண்டும் என்று ஆசைப்பட்டான்.அதற்காக தனது வருவாயில் மிகச்சிறிய பகுதியை   சேமித்து வைத்தான்.ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் திருப்பதி சென்றான்.கையில் குறைந்த அளவே பணம் இருந்ததால், பேருந்தில் மலைக்கு செல்லஇயலாது,நடந்து மலைமீது கோவிலை அடைந்தான். பசியினால் மிகுந்த களைப்புடன் இருந்தான்.இருந்தாலும் கடவுளை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தர்ம தரிசனத்திற்கான வரிசையில் நின்றான். வரிசை மெதுவாக நகர்ந்தது.அதே சமயம் பணம் படைத்தவர்களும்,அதிகாரம் படைத்தவர்களும்,தனி வழியில் விரைவாக சென்று ஆண்டவனை மகிழ்ச்சியுடன் தரிசித்துக் கொண்டிருந்தனர்.தான் நின்று கொண்டிருந்த நீண்ட வரிசையைப் பார்த்து எப்போது ஆண்டவனை தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமோ என்ற கவலையுடன் இருந்தான்.நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. அவனை அறியாமல் மிகுந்த களைப்பினால் வரிசையிலேயே படுத்து தூங்கி விட்டான்.அப்போது அவன் கனவில் கடவுள் வந்தார்.அவரைப் பார்த்ததும் பக்தனுக்கு கோபம் வந்து விட்டது. அவன், ''கடவுளே!எத்தனை நாளாக சிரமப்பட்டு உன்னை தரிசிக்க வந்திருக்கிறேன் .இங்கு வந்தால் உன்னை தரிசிக்க எவ்வளவு சிரமங்கள்?என்ன இருந்தாலும் நீயும் பணக்காரர்களைத் தானே ஆதரிக்கிறாய்!அதோ பார்,அவர்கள் எல்லாம் எவ்வளவு விரைவில் உன்னை மகிழ்ச்சியுடன் வணங்கி செல்கிறார்கள்? பசியுடன் காத்திருக்கும் என் நிலையைப் பார்'' என்றான்.கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார்,'' அடே,பைத்தியக்காரா,அவர்கள் எல்லாம் கல்லை வணங்கிச் செல்கிறார்கள்.இதோ,நான் உன்னுடன் தானே பேசிக் கொண்டிருக்கிறேன்!''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

அதானே...!

எதற்கும் பொறுமை வேண்டும்...

ஆம். நிதர்சனமான உண்மை. செய்யும் தொழிலே தெய்வம். மற்றவர்களுக்கு உதவுதல் - இவற்றில்தான் தெய்வம் உறைந்துள்ளது. கடனே என்று தொழிலைச் செய்பவர்களும் பிறர்க்கு உதவ மனமில்லாதவர்களும் கோயிலில் கல்லைத்தான் காண்கின்றனர். தெய்வத்கை அல்ல.

Post a Comment