ஒரு கூத்தாடி தன் கழுதை,குரங்கு,நாய் இவற்றுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தான்.அந்த ஊரில் ஒரு விசேசமான கோவில் இருப்பதாகவும் அங்கு வேண்டிக் கொண்டது அப்படியே நடக்கும் என்று சொன்னார்கள் கூத்தாடியும் தன் பரிவாரத்துடன் அக்கோவிலுக்கு சென்றான்.கழுதை,குரங்கு,நாய் மூன்றும் கடவுளிடம் தங்களுக்கு பிடித்ததை வேண்டிக்கொண்டன.கூத்தாடி,''நீங்கள் எல்லாம் என்ன என்ன வேண்டிக் கொண்டீர்கள் என்பதை என்னிடம் சொல்லுங்கள்.நான் அதில்லாமல் வேறேதேனும் வேண்டிக் கொள்கிறேன்.'' என்றான். கழுதை,''என்னை இந்த நாட்டின் அதிபதியாக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்,''என்றது.குரங்கு ,''என்னை தலைமை அமைச்சராக ஆக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன் ''என்றது.நாயோ,''என்னை தலைமை மத குருவாக ஆக்க வேண்டும்,என்றுதான் கேட்டேன்,'' என்றது. கூத்தாடி கடவுளிடம் மன்றாடினான்,''ஆண்டவனே,என் கண்ணைக் குருடாக்கிவிடு.இவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூத்தை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது.''
|
|
ஹா... ஹா... நன்றி சார்...