இங்கிலாந்தின் பிரதமராய் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சிறந்த பேச்சாளர்.ஒரு முறை ஒருவர்,''மேடையில் இவ்வளவு சரளமாகப் பேசுகிறீர்களே, மேடை பயம் கொஞ்சம் கூட இல்லாமல் இருப்பது எப்படி?''என்று கேட்டார்.சர்ச்சில் சொன்னார்,''நான் பேசும்போது என் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்வேன்.அதனால் பயம் ஏற்படுவது இல்லை.''இதே கேள்வி ஒரு முறை ஜென் மாஸ்டர் ரின்சாயிடம் கேட்கப்பட்டது.ஏனெனில் அவரும் தங்கு தடையின்றிப் பேசக் கூடியவர்.அவர் சொன்னார்''என் முன்னால் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நான்தான் அங்கு உட்கார்ந்திருப்பதாக எண்ணிக் கொள்வேன்.இந்த மக்களெல்லாம் நான்தான் என்று என்னும்போது எந்த வித பயமும் ஏற்படுவதில்லை.நான்தான் பேச்சாளர்,நான்தான் கேட்பவர்.அதனால் பயமில்லை,''
இதுதான் மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் உள்ள கலாச்சார வித்தியாசம்.அடுத்தவரை முட்டாளாக நினைப்பதற்கும்,தானாகவே பாவிப்பதற்கும் எவ்வளவு மனதளவில் வித்தியாசம்!
|
|
அறிந்து கொண்டேன்... நன்றி...