தேர்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது.அதில் பல பறவைகளின் கால்களின் படங்களைப் போட்டு பறவையின் பெயர் என்ன என்று கேட்டிருந்தனர்.ஒரு மாணவனுக்குஒரே குழப்பம். எல்லாம் ஒரே மாதிரி தெரிந்தது .அவனால் எந்தக் கால் எந்தப் பறவைக்கு உரியது என்றுகண்டு பிடிக்கவே முடியவில்லை. அவனுக்குக் கோபம் வந்தது.எழுந்தான்.''சே!இதுபோல மோசமான கேள்வித்தாளை நான் பார்த்ததே இல்லை,''என்று சொல்லிக் கொண்டே கேள்வித்தாள்,விடைத்தாள் அனைத்தையும் தூக்கி எறிந்தான்.அங்கிருந்த ஆசிரியருக்கு இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று புரியவில்லை. மெதுவாக,''தம்பி,உன் பெயர் என்ன?''என்று கேட்டார்.உடனே அவன் கோபம் சற்றும் குறையாது தனது பேண்டின் கால் பகுதியை மேலே தூக்கிக் காண்பித்து,''நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்,''என்றான்.
******
பாட்டி சொன்னாள்,''தம்பி,உனக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறந்திருக்கிறான். அவன் அப்படியே உன் அப்பனை உரிச்சு வைச்சது போல இருக்கிறான்,'' சிறுவன் குதூகலத்துடன் கேட்டான்,''அப்படியா?அவனுக்கு இப்போதே மீசையெல்லாம் இருக்கா?''
******
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
கணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக் கடைக்கு விரைந்தாள்.அது ஒரு ஐந்து தளக் கட்டிடம்.ஒவ்வொரு தளமாக மேலே செல்லச்செல்ல கணவர்களின் விலை அதிகம் என்று கூறப்பட்டது.மேலும் மேலே சென்றால் மறுபடியும் கீழ்த் தளத்துக்கு வர முடியாது என்றும் கூறப்பட்டது.முதல் தளத்தில் நுழையும் இடத்தில் ஒரு பலகையில், ''இங்குள்ளவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.அந்தப் பெண் உள்ளே செல்லாது இரண்டாம் தளத்துக்கு சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பதோடு குழந்தைகளின் மீது பாசமாக இருப்பவர்கள்.''என்று இருந்தது.இளம்பெண் அங்கு உள்ளே செல்லாது அடுத்த தளத்துக்கு விரைந்தாள். அங்கு, ''இங்குள்ளவர்கள்,நல்ல வேலையில் இருக்கிறார்கள்..குழந்தைகளின் மீது அன்பு காட்டுபவர்கள்.மேலும் பார்க்க மிக அழகாக இருப்பார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.ஆர்வமுடன் அப்பெண் நான்காம் தளத்துக்கு சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பவர்கள். குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர்கள். அழகானவர்கள். மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்பவர்கள்.''என்று இருந்தது.இங்கும் உள்ளே செல்லாது அடுத்த தளத்திற்கு அப்பெண் சென்றாள்.அங்கு,'' வணக்கம்,இங்கு யாருமில்லை.நீங்கள் இத்தளத்திற்கு வருகை தந்த 87,65,432,வது நபர்.பெண்கள் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்,என்று உறுதிப்படுத்தியமைக்கு நன்றி.நீங்கள் வெளியே செல்லலாம்.''என்றிருந்தது.
''ஆண்டவன் தான் நம் வயிற்றை நிரப்புகிறான்,''என்று ஆத்திகர் ஒருவர் தனது நாத்திக நண்பரிடம் சொன்னார்.''அதெப்படி,நாம் சாப்பிட்டால்தானே நம் வயிறு நிரம்பும்?''என்று கேட்டநாத்திகர் அதையும் சோதித்துப் பார்த்து விடுவது என்று நினைத்தார்.வீட்டில் மனைவியிடம் நிறைய உணவு தயாரிக்க சொல்லி அதை கட்டிக் கொண்டு ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு தான் கொண்டு வந்த சாப்பாட்டை திறந்து முன்னால் வைத்துக் கொண்டு அதைத் தொடாமலேயே அமர்ந்திருந்தார்.நாம் சாப்பிடாமல் இருக்கும்போது ஆண்டவன் வந்து நம் வயிற்றை நிரப்புகிரானா என்று பார்ப்போம் என்று நினைத்தார்.அப்போது இரண்டு முரடர்கள் அந்தப் பக்கம் வந்து இவனைப் பார்த்தார்கள்.அவர்கள் இருவருக்கும் நல்ல பசி.இவன் உணவை எடுத்து சாப்பிடலாம் என்று அவர்கள் யோசித்தபோது ஒருவன் கேட்டான் ,''இவன் எதுவும் பேசாமல் உணவைத் திறந்து வைத்தபடி இருக்கிறான்.ஒரு வேலை உணவில் விஷம் எதுவும் இருக்குமோ?''இருவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு உணவை எடுத்து இருவரும் வம்படியாக நாத்திகன் வாயில் ஊட்டி விட்டனர்.நாத்திகனுக்கு வயிறு நிரம்பி விட்டது.மீதி இருந்த உணவை முரடர் இருவரும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றனர்.நாத்திகன் திகைப்பில் உட்கார்ந்திருந்தான்.அப்போது அவனது ஆத்திக நண்பர் வந்தார்.அவர்,''நான் நடந்ததைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்,ஏன் திகைத்துப் போயிருக்கிறாய்?நான் சொன்னது நடந்து விட்டது என்பதால்தானே?''என்று கேட்டார்.அதற்கு நாத்திகன் சொன்னான், ''இல்லை,என் மனைவி தயாரிக்கும் உணவு எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்காது.இவர்கள் இருவரும் எப்படி இதை சாப்பிட்டார்கள் என்று எண்ணி திகைத்து நிற்கிறேன்,''
கல்யாணம் ஆன புதிதில்ஒரு கணவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடல்:
கணவன்: உங்க அம்மா வீட்டுக்குப் போறியா?
மனைவி:என்னைப் போகச் சொல்கிறாயா?
கணவன்:ஊஹூம்,அதை நினைத்துக்கூடப் பார்க்காதே.
மனைவி:உனக்கு என் மீது உண்மையான அன்பு இருக்கிறதா?
கணவன்:எப்போதும்.
மனைவி:எப்போதாவது என்னை ஏமாற்றியிருக்கிறாயா?
கணவன்:ஊஹூம்,ஏன் இப்படிக் கேட்கிறாய்?
மனைவி:என்னை முத்தம் இடுவாயா?
கணவன்:வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்.
மனைவி:என்னை அடிப்பாயா?
கணவன்:ஊஹூம்,உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?
மனைவி:நான் உன்னை நம்பலாமா?
கணவன்:ஹூம்.
மனைவி:என் அன்புக் கணவனே!
அது சரி,திருமணமானபின் பல ஆண்டுகள் கழித்தபின் அவர்களுக்கிடையே உரையாடல் எப்படி இருக்கும்?அதற்குத் தனியாக ஒன்றும் தயாரிக்க வேண்டாம்.மேலே கண்ட உரையாடலை கீழிருந்து மேலாகப் படியுங்கள் போதும்.
''கோழி முதலில் வந்ததா,முட்டை முதலில் வந்ததா?''
'கோழிதான் முதலில்வந்தது.'
''எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?''
'முட்டையிலிருந்து கோழியும் வரலாம்,சேவலும் வரலாம்.ஆனால் கோழியிலிருந்து முட்டை மட்டும் தானே வரும்!'
******
வயதான கணவன் மனைவி ஒரு உணவு விடுதிக்கு வந்தனர்.அவர்கள் உட்கார்ந்த இடத்திற்கு அருகில் வாலிபர் ஒருவர் இருந்தார்.பேச்சு வாக்கில் அந்த தம்பதியினர் சொன்னார்கள்,''நாங்கள் எது செய்தாலும் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம்.'' பின் ஒரு தோசைக்கு கணவர் ஆர்டர் செய்தார்.அதை அவர் மட்டுமே சாப்பிட,அந்தப்பெண் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர் மன வருத்தத்துடன்,''நான் வேண்டுமானால் அம்மாவுக்கு ஒரு தோசை ஆர்டர் செய்யட்டுமா?''என்று கேட்க அந்தப் பெண் அவசரமாக மறுத்தார்.''நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறீர்களே?"'என்று கேட்க அந்தப் பெண் சொன்னார்,''வேறு ஒன்றுமில்லை.பல் செட்டையும் நாங்கள் இருவரும் பகிர்ந்து கொள்வோம். அதற்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.''
******
இளைஞன் ஒருவன் திருமணம் செய்து கொள்ளாது,தனது வருமானத்தை எல்லாம் மது,மாது,சிகரெட் என்று செலவழித்துக் கொண்டிருந்தான்.நண்பன் ஒருவன் சொன்னான்,''நீ திருமணம் செய்து கொள்.வயதான காலத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கவாவது ஒரு ஆள் வேண்டுமே!''இளைஞனும் அது சரி எனத் தோன்றவே திருமணம் செய்து கொண்டான்.வயதான காலத்தில் மரணப் படுக்கையில் அவன் தன் நண்பனிடம் சொன்னான்.நீ சொன்னாய் என்று திருமணம் செய்தேன்.மங்கைக்கு செலவழித்ததை என் மனைவிக்கு செலவு செய்தேன்.மதுவுக்கு செலவழித்ததை குழந்தை வளர செலவு செய்தேன்.சிகரெட் செலவை அவர்கள் நலத்துக்கு செலவளித்தேன்.'' நண்பன்,''அதனால் என்ன எல்லோரும் நன்றாகத்தானே இருக்கிறீர்கள்?''என்று கேட்க அவன் சொன்னான்,''எல்லாம் சரி,எனக்கு இப்போது தாகம் எடுக்கவில்லையே!''
******
மனைவி டாக்டரிடம் சொன்னாள்,''டாக்டர்,நீங்கள் என் கணவன் உடல் இளைக்க ,அவரை பச்சைக் காய்கறிகள் சாப்பிடச் சொன்னீர்கள்.எங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே எல்லாக் காய்கறிகளும் விளைவதால்,நான் சமைத்துக் கொடுத்தேன்.அவருக்கு அது பிடிக்கவில்லை.தோட்டத்தில் பச்சைக் காய்கறிகளை ,மாடு மாதிரி நான் மேய்ந்து கொள்கிறேன் என்று சொன்னார்.அன்றிலிருந்து தினமும் மூன்று வேளையும் அவரே தோட்டத்திற்கு சென்று காய்கறிகளை சாப்பிடுகிறார்.எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது ,''டாக்டர்,''அதனால் என்னம்மா, நல்லது தானே,இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்..அவள் சொன்னாள்,''தினமும் இரவில் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டதை அசை போடுகிறாரே,டாக்டர்.''
******
ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.அப்போது பியூன் வந்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகக் கூறினார்.தான் இல்லாதபோது மாணவர்கள் அமைதியாக இருக்க,அவர்களைப் பார்த்து,''நான் வரும் வரை ஆங்கிலப் புத்தகத்தில் பதினைந்தாம் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.வந்ததும் கேட்பேன்,யாராவது படிக்காமல் இருந்தால்,அடி உண்டு,''என்று சொல்லிவிட்டு அவர் வெளியே சென்றார்.சிறிது நேரம் கழித்து வகுப்பறைக்கு வந்து ஒவ்வொரு மாணவராய்ப் பார்த்து ,அவர் சொன்ன பாடத்தைப் படித்தானா என்று கேட்க எல்லோரும் படித்ததாக சொன்னார்கள்.பின் ஆசிரியர்,''உண்மையிலேயே யாராவது நான் சொன்னதைப் படித்திருந்தால் அந்த பாடம் இருக்கும் பக்கத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்ட வேண்டும்,''என்றார்.உடனே மாணவர்கள் அனைவரும் பரபரவென்று புத்தகத்தைத் திருப்பினார்கள். அந்தோ!
அப்புத்தகத்தில் மொத்தமே பதினான்கு பாடங்கள் தான் இருந்தன.
******
கணவன் மீது கோபம் கொண்ட மனைவி,''நீங்கள் நன்றாக இருக்க மாட்டீர்கள்.கொஞ்சம் கொஞ்சமாக வேதனை அனுபவித்து சாவீர்கள்,''என்று கத்தினாள்.வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த கணவன் கேட்டான்,''அப்போ,என்னை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்கிறாயா?''
******
கணவன் மனைவியிடம்,தான் ஒரு அற்புத விளக்கைக் கண்டதாகச் சொன்னான்.மனைவி ஆர்வத்துடன்,''நீங்கள் விளக்கைத்தேய்த்து என்ன வரம் கேட்டீர்கள்?''கணவன் சொன்னான்,''என் மனைவியின் மூளையின் சக்தியை பத்து மடங்கு அதிகம் பண்ணிக்கொடு,என்று கேட்டுக் கொண்டேன்,''மனைவி மிக்க மகிழ்ச்சியுடன்,''அப்படியா,அந்த பூதம் அதை செய்து கொடுப்பது பற்றி ஏதாவது சொன்னதா?''என்று கேட்டாள்.கணவன் வருத்தமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்,''அந்த பூதமென்ன சொல்லிற்று,தெரியுமா?ஜீரோவை எந்த எண்ணால் பெருக்கினாலும் ஜீரோ தானே வரும் என்று கேட்கிறது.''
******
கணவன் மனைவி,இருவரும் ஒரு உணவு விடுதியில் சாப்பிட சென்றனர்.உணவு வைக்கப்பட்டதும் கணவன் ஆர்வத்துடன் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.மனைவி கணவனிடம்,''வீட்டில் எப்போதும் சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வீர்களே,இன்று மறந்து விட்டீர்களா?''என்று கேட்டாள்.கணவன் சொன்னான்,''கவலைப்படாதே,இங்கு உள்ள சமையற்காரர் நன்றாகவே சமைப்பார்.''
******
ஒருவன் வீட்டு வாசலில் ஒரு பலகை வைத்திருந்தான்.அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?''ஏற்கனவே தொந்தரவுக்குள்ளான என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.எனக்குத் திருமணம் ஆகி விட்டது.''
******
தனது திருமண பத்தாவது ஆண்டு நிறைவு தினத்தில்,கணவன் மனைவிக்கு ஒரு வைர ஒட்டிகை பரிசளித்தார்.அன்றிலிருந்து ஆறு மாதம்மனைவி கணவனிடம்பேசவே இல்லை.ஏன்?ஒட்டிகை போலி வைரமா?இல்லை.பின் என்ன,அவள் கேட்ட மாடலில் இல்லையா?இல்லவே இல்லை,அவளுக்கு அந்த ஒட்டிகை மிகவும் பிடித்திருந்தது.பின் என்ன பிரச்சினை?பிரச்சினை ஒன்றும் இல்லை.ஒட்டிகை வாங்கித் தருவதற்கு கணவன் போட்ட நிபந்தனையே அதுதான்.
******
அலுவலகத்தில் அதிகாரியிடம் ஒருவர் கேட்டார்,''சார்,நீங்கள் ஆபீசில் சிங்கம் போல இருக்கிறீர்கள்.ஒவ்வொருவரும் உங்களைக் கண்டாலே பயப்படுகிறார்கள்.வீட்டிலே நீங்கள் எப்படி சார்?''
''அட,வீட்டிலேயும் நான் சிங்கம் தான் ஐயா.என்ன,சிங்கத்தின் மீது காளி தேவி அமர்ந்திருப்பாள்.''
******
மகிழ்ச்சியான தம்பதிகள் எப்படி இருப்பர்?
மனைவி விரும்புவதை கணவன் செய்வான்.
மனைவி விரும்புவதை மனைவி செய்வாள்.
******
உன்னுடைய குறைகளைக் கண்டு நீ சிரித்தால் உன் வாழ்க்கை நீண்ட நாள் வரும்.உன் மனைவியின் குறைகளை கண்டு நீ சிரித்தால் உன் வாழ்க்கை சீக்கிரம் முடிந்துவிடும்.
******
மனைவி:நான் எழுதிய ஆணைகளின் படி இந்த கணணி செயல் பட மாட்டேன் என்கிறதே!
கணவன்:அது கணணி தானே!கணவன் இல்லையே?
******
திருமணம் என்றால் என்ன?
எப்போது ஒரு மனிதனுக்கு ஏழாவது அறிவு உருவாகி மற்ற ஆறு அறிவுகளையும் சிதைத்து விடுகிறதோ,அப்போது அவனுக்குத் திருமணம் ஆகியுள்ளது என்று பொருள்.
******
திருமண வாழ்வில் நான்கு நிலைகள் உள்ளன;
*ஒருவர் மீது ஒருவருக்குப் பைத்தியம்.
*ஒருவருக்காக ஒருவர்.
*ஒருவரைக் கண்டால் அடுத்தவருக்குப் பைத்தியம்.
*ஒருவரினாலேயே அடுத்தவருக்குப் பைத்தியம்.
******
ஒரு மனிதனின் படுக்கை அறை எத்தகைய மணமுள்ளதாய் இருக்கும்?
திருமணம் ஆன முதல் மூன்று ஆண்டுகள்--
பூக்கள் ,பழங்கள்,வாசனை திரவியங்கள் ஆகியவற்றின் மணம் இருக்கும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு:
குழந்தைக்கான பவுடர்,குழந்தைக்கான எண்ணெய் வகைகள்,குழந்தையின் மலம்,சிறுநீர் ஆகியவற்றின் வாடைகள் இருக்கும்.
ஆண்டுகள் கழித்து:
தலைவலி மருந்து,உடல் வலி மருந்து ஆகியவற்றின் மணம் இருக்கும்.
ஆண்டுகளுக்குப் பிறகு:
பத்தி,சூடம்,சாம்பிராணி.முதலான மணங்கள்.
******
நன்றி:நண்பர் சித.மெய்யப்பன்.
மூன்று பேர் அவர்கள் செய்து கடுமையான குற்றத்திற்காக முப்பது ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர்.ஒவ்வொருவரும் ஒரு கோரிக்கை வைக்கலாம் என்று கூறப்பட்டது.முதலாவது ஆள் பெண் வேண்டும் என்று கேட்டான் இரண்டாம் ஆள் செல்போன் வேண்டும் என்று கேட்டான்.மூன்றாவது ஆள் சிகரெட் கேட்டான்.மூவர் கோரிக்கைகளும் அதிகாரிகளால் நிறைவேற்றி வைக்கப்பட்டது.முப்பது ஆண்டுகளுக்குப்பின் மூவரும் விடுதலை பெற்று வெளியே வந்தனர்.அப்போது முதலாவது ஆள் ஒரு பெண்ணோடு பத்து குழந்தைகளோடு வெளியே சென்றான்.இரண்டாவது ஆள் செல்போன் மூலம் நடத்திய கமிசன் வியாபாரத்தினால்பெற்ற பத்து லட்சம் ரூபாயுடன் சென்றான்.மூன்றாமவனோ,வெளியே வந்ததும்,''சிகரெட் பத்த வைக்க நெருப்புப் பெட்டி கிடைக்குமா?''என்று எதிரில் வந்த ஆட்களிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஒருவன் தனது நண்பனிடம்,''இன்று காலையில் எனக்கும் என் மனைவிக்கும் ஒரே பிரச்சினை. நான் கோவிலுக்குப் போக வேண்டும் என்று சொன்னேன்.என் மனைவியோ சினிமாவுக்குத்தான் போக வேண்டும் என்று சொன்னாள்.''
'வீண் பேச்சு எதற்கு?சினிமா எப்படி இருந்தது என்று சொல்.'
******
கம்ப்யூட்டர் ஜாதகம் கணிக்கும் இடத்தில் ஒருவன் கேட்டான்,''கம்ப்யூட்டரே,நீ எவ்வளவு நாள் பழுதில்லாமல் இயங்குவாய்?''
''நீ நாளை மதியம் சாகப் போகிறாய்!நான் எவ்வளவு நாள் உழைத்தால் உனக்கென்ன?''என்று பதில் தந்தது கம்ப்யூட்டர்.
******
ஒரு பணக்காரருக்குக் காலில் முள் தைத்துவிட்டது.டாக்டரிடம் சென்று காண்பித்தார்.''உங்களுக்கு கண் ஆப்பரேசன் செய்யணும்,''என்றார் டாக்டர்.''காலிலேதானே முள் தைத்திருக்கிறது?கண்ணில் ஏன் ஆப்பரேசன் செய்யணும் என்று சொல்றீங்க?''என்று பணக்காரர் கேட்டார்.
''உங்களுக்குக் கண் ஒழுங்காய்த் தெரிந்திருந்தால் இப்படி முள்ளை ஏன் மிதிக்கிறீர்கள்?"'என்றார் டாக்டர்.
******
''எல்லா ஆண்களுக்கும் வேலை கொடுப்பது எப்படி?''என்று மன்னன் கேட்டான்.அமைச்சர் சொன்னார்,''ஆண்கள் எல்லோரையும் ஒரு தீவிலும்,பெண்களை எல்லாம் வேறு ஒரு தீவிலும் குடியேற்றுங்கள் எல்லா ஆண்களுக்கும் வேலை கொடுத்து விடலாம்.''
'புரியவில்லையே,'என்று மன்னன் சொல்ல அமைச்சர் தொடர்ந்தார்,''எல்லா ஆண்களும் மறு தீவுக்கு செல்ல படகு கட்ட ஆரம்பித்து விடுவார்கள்,மன்னா!''
******
''பசுவிலிருந்து,பால் வரும்,பாலிலிருந்து வெண்ணெய் வரும்,வெண்ணையில் இருந்து நெய் வரும்,நெய்யிலிருந்து என்ன வரும்?''
'தெரியலையே'
''வாசம் வரும்!''
******
நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வந்த நண்பன் சோமுவை வரவேற்று அவருடன் பேசிக் கொண்டிருந்தார் ராமு .அப்போது சிறுவனான அவருடைய இளைய மகன் அங்கு வந்து சோமுவின் மடியில் உட்கார்ந்து குதிக்க ஆரம்பித்தான்.''மாமாவைத் தொந்தரவு செய்யக்கூடாது''என்று மகனை கண்டித்தார் ராமு.சோமு,''அவன் சிறுவன்தானே!அவனுக்கு என்ன தெரியும்? அவன் பாட்டிற்கு உட்கார்ந்திருக்கட்டும்.''என்றார்.சிறிது நேரம் கழித்து சிறுவன் அவர் மீது விளையாட்டு சாமான்களைத் தூக்கி எறிந்தான்.அப்போதும் அவனை ராமு கண்டித்தார்.சோமு,''பாவம் அவனுக்கு என்ன தெரியும்?அவன் விளையாடட்டும்,''என்றார்.பின் சிறுவன் சோமுவின் தோளில் ஏறிக்கொண்டு அவர் காதைப் பிடித்து திருக ஆரம்பித்தான்.அவருக்கு கடுமையான வலி.ராமு சிறுவனை அடிக்கப் போனார்.தடுத்த சோமு,''சிறுவனுக்கு என்ன தெரியும்?விட்டுவிடு,''என்றார்.ராமுவும்,'ஐந்து நிமிடம் பொறு.உனக்கு காபி போட்டு எடுத்து வருகிறேன்,'என்று சொல்லி உள்ளே சென்றார்.அவர் கண் மறைந்ததும் சோமு நாக்கைத் துருத்திக்கொண்டு சிறுவனை முதுகில் இரண்டு போட்டு காதைப் பிடித்துத் திருகினார்.சிறுவன் அழ ஆரம்பித்து விட்டான்.'என்ன,என்ன,'என்று கேட்டுக் கொண்டே ராமு வந்தார்.சோமுவும் சிரித்துக் கொண்டே,''அவனுக்கு என்ன தெரியும்,சிறுவன்தானே,அழுதுவிட்டுப் போகட்டும்,''என்றார்.
இளம் காக்கை ஒன்றிற்கு ஒரு நத்தைக்கூடு கிடைத்தது.ஆனால் அதை உடைத்து சாப்பிடத் தெரியவில்லை.அருகிலிருந்த ஒரு வயதான காக்கையிடம் நத்தைக்கூடை உடைப்பது எப்படி என்று கேட்டது.அக்காக்கையும் சற்று உயரே பறந்து சென்று அங்கிருந்து நத்தைக்கூடை அருகில் இருக்கும் பாறை மீது போட்டால் அது உடைந்து விடும் என்று ஆலோசனை சொன்னது. இளம் காக்கையும் அவ்வாறே செய்தது.ஆனால் கீழே திரும்பி வருமுன்னே முதிய காக்கை உடைந்த கூட்டிலிருந்து வெளி வந்த நத்தையை சாப்பிட்டு விட்டது.இது நியாயமா என்று இளம் காக்கை கேட்க முதிய காக்கை சொன்னது,''நீ என்னிடம் கூட்டை உடைக்க மட்டும் தானே ஆலோசனை கேட்டாய்.அதை சொல்லி விட்டேனே!''என்றது.
இக்கட்டான சூழ்நிலையில் போகிற போக்கில் யாரிடமாவது ஆலோசன கேட்கக் கூடாது.
******
திருமணம் முடிந்தது.மாமனார் மருமகளிடம் சொன்னார்,''அம்மா,என் பையனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு.அவனுக்கு வாய் கொஞ்சம் நீளம்.''மருமகள் சொன்னாள்,''பரவாயில்லை மாமா,எனக்கு கை கொஞ்சம் நீளம்.''
******
ஒரு பெண் சொன்னாள்,''என் கணவன் குடித்து விட்டு வந்தால் என்னைத் தூங்கவே விட மாட்டார்,''அடுத்தவள் சொன்னாள்,''பரவாயில்லையே,என் கணவன் குடித்துவிட்டு வந்தால் எங்கள் தெருவில் யாரையும் தூங்க விட மாட்டார்.''
******
''என் மனைவி என்னைக் கஷ்டப்படுத்திய போதெல்லாம் பல்லைக் கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன்.இனிமேல் அது முடியாது,''என்றார் ஒருவர்.நண்பர் கேட்டார்,''உங்களுக்கு அவ்வளவு தைரியம் வந்திருச்சா?''அவர் சொன்னார்,''அட நீங்க வேற,என் பல்லெல்லாம் உதிர்ந்து போச்சு.அதைச் சொல்ல வந்தா.....''
******
நடத்துனர் பின் பகுதியிலிருந்து டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.ஒரு பயணி,''என் மனைவி முன் புறம் இருக்கிறாள்.அவள் எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துவிடுவாள்,''என்றார்.நடத்துனருக்குக் கோபம் வந்துவிட்டது.''உன் திருமணத்திற்கு எனக்கு அழைப்பிதழ் கொடுத்தாயா?நான் உன் திருமணத்திற்கு வந்தேனா,உன் மனைவி யார் என்று எனக்கு அடையாளம் தெரிய?''என்று எரிச்சலுடன் கேட்டார்.பயணி மிக அமைதியாகப் பதில் சொன்னார்,''சார்,கோபப்படாதீங்க.என் மனைவியைக் கண்டு பிடிப்பது ரொம்ப சுலபம்.அவள் இப்பேருந்தில் ஏறி இரண்டு நிமிடம் ஆகி விட்டது.உறுதியாக இவ்வளவு நேரத்தில் பக்கத்தில் யாருடனாவது சண்டை போட ஆரம்பித்திருப்பாள்.நீங்கள் முன்னால் போகும்போது எந்தப் பெண் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாளோ,அவளே என் மனைவியாக இருப்பாள்.''நடத்துனர் தலையில் அடித்துக் கொண்டார்.
******
மனைவி ஒரு பவுடர் டப்பாவினை இருபது ரூபாய் கொடுத்து வாங்கி வந்தார்.விபரம் அறிந்த கணவன்,தான் அறிவாளி என்பதை அவளிடம் காட்ட,''முட்டாக்கழுதை,அவன் இருபது ரூபாய் சொன்னால் அப்படியே கொடுத்து விடுவதா?நானாக இருந்தால் அவனிடம் பேசியே பத்து ரூபாய்க்கு வாங்கியிருப்பேன்,''என்றான்.மனைவி சொன்னாள்,''அப்படிப் பேசி வாங்கணும் என்றால்.....நான் சிரிச்சுப் பேசியே இலவசமாக வாங்கியிருப்பேனே!''கணவன் வாயைத் திறக்கவில்லை.
******
ஒருத்தி தன் தோழியிடம் சொன்னாள்,''என் கணவர் என்பது பவுன் நகை சேர்த்திருக்கார்.வங்கியில் பத்து லட்சம் சேர்த்திருக்கிறார்.உன் கணவர் என்ன சேர்த்திருக்கிறார்?''தோழி சொன்னாள்,''என் கணவர் திருச்சியில் தீபாவை சேர்த்திருக்கிறார்.மதுரையில் மாலாவை சேர்த்திருக்கிறார்.''
******
நீண்ட நாள் கழித்து நண்பன் ஒருவன் எதிர் பாராத விதமாக வீட்டிற்கு வந்து விட்டான்.வீட்டுக்காரன் மனைவியிடம் தன் நண்பனுக்கு உணவளிக்க சொன்னான்.நண்பர்கள் இருவரும் மேஜையில் சாப்பிட அமர்ந்தனர். நண்பனுக்கு நல்ல பசி.குறிப்பறிந்த வீட்டுக்காரன் 'இன்னும் கொஞ்சம் வை,'என்று இரண்டு தடவை சொல்லி விட்டான்.சாப்பாடு தீரும் நிலை.அடுத்த முறை 'இன்னும் கொஞ்சம் வை' என்று கணவன் சொன்னபோது,நிலையை விளக்க அவன் காலை ஒரு மிதி மிதித்தாள்.அப்படி இருந்தும் மறுபடியும் கணவன்,'இன்னும் கொஞ்சம் வை,'என்றான்.இம்முறை சற்று ஓங்கி மிதித்துவிட்டு மீதி இருந்த சாதத்தை எல்லாம் நண்பனுக்கு வைத்து விட்டாள்.ஒரு வழியாக சாப்பிட்டு முடித்த நண்பன் உடனே கிளம்புவதாக சொன்னான்.வீட்டுக்காரன்,''இரவில் இவ்வளவு நேரம் ஆகி விட்டது.எனவே இங்கு தங்கி காலை செல்லலாமே?''என்று கேட்டான்.நண்பனோ முக்கிய வேலை இருப்பதாக சொல்லி விடை பெற்று சென்று விட்டான்.அவன் தலை மறைந்ததும் மனைவி கணவனிடம் கோபத்துடன்,''சாதம் கொஞ்சம்தான் மீதி இருக்கிறது என்று உங்கள் காலை மிதித்து சைகை செய்தும் நீங்கள் விடாப்பிடியாக,'இன்னும் கொஞ்சம் வை'என்று சொல்கிறீர்களே,உங்களுக்கு அறிவு இருக்கிறதா?''என்று கேட்டாள்.கணவன் பதட்டத்துடன்,''அய்யையோ,நீ என் காலை மிதிக்கவில்லையே!அப்படியானால்....ஓ,அதுதான் அவன் அவ்வளவு வேகமாக ஓடி விட்டானா!''என்றான்.
திருமணம் ஆகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவியிடம் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப் போவதாக சொன்னான்.மனைவி சொன்னாள்,''அப்படியா மிக்க மகிழ்ச்சி,நல்ல மாப்பிள்ளையாய்ப் பாருங்க,''
******
சீர்திருத்தவாதியின் நண்பன் அவரிடம் சொன்னான்,''அண்ணே.நீங்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தேன்.ஒரு விதவைக்கு மறுவாழ்வு கொடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.''அவர் சொன்னார்''அப்படியா,ரொம்ப மகிழ்ச்சி.சரி,எப்போது செய்யப் போகிறாய்?''நண்பன் சொன்னான்,''அது நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்பதைப் பொறுத்தது.''
******
கணவன் மனைவியிடம் சொன்னான்,''நமக்குக் கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகியும் நீ அன்றைக்குப் பார்த்த மாதிரியே இருக்கிறாயே!''மனைவி சொன்னாள்,''அப்படியா...கல்யாணத்தன்று உடுத்திய சேலையைத் தானே இன்று வரை உடுத்திக் கொண்டிருக்கிறேன்.வேறு சேலை உடுத்தினால்தானே வேறு மாதிரி இருப்பேன்?''
******
நண்பன் கேட்டான்,''வீட்டில் நீ யார் பக்கம்?''இவன் சொன்னான்,''காலையில் தாயின் பக்கம்.இரவினில் மனைவி பக்கம்.பகலில் தெருப்பக்கம்.''
******
'',நண்பரே!உங்கள் பெண்ணுக்கு போன வாரம் திருமணமாமே!என்னிடம் நீங்கள் சொல்லவேயில்லையே!''
''என்னிடமே நேற்றுதானே அவள் சொன்னாள்,''
******
ஒரு பூனை சாராயப் பானைக்குள் விழுந்து விட்டது அதனால் வெளியில் வர முடியவில்லை.அங்கு வந்த எலியிடம் அது சொன்னது,''ஒரு கயிறை மட்டும் எடுத்து ஒரு முனையை என்னிடம் கொடுத்துவிட்டு மறுமுனையை நீ கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் நான் வெளியே வந்துவிடுவேன்.வெளியே வந்ததும் உன்னை சத்தியமாகக் கொல்ல மாட்டேன்,''எலியும் சரியென்று சொல்லி அவ்வாறே செய்தது .வெளியே வந்த பூனை உடனே எலியை விரட்டியது.கொடுத்த வாக்கை மீறலாமா என்று எலி கேட்டபோது பூனை சொன்னது,''குடி வெறியில் நான் ஆயிரம் சத்தியம் செய்திருப்பேன்.அதை நீ நம்பலாமா?''
******
அரசியல்வாதி ஒருவர் மேடையில் பேசி முடித்துக் கீழே இறங்கினார். அப்போது ஒரு நிருபர் கேட்டார்,''நீங்கள் மது குடிப்பது உண்டா?''அரசியல்வாதி கேட்டார்,''இது அழைப்பா,விசாரணையா?''
******
தபால் அலுவலகத்துக்கு கோபத்துடன் ஒருவர் வந்தார்.''எனக்கு அடிக்கடி மிரட்டல் கடிதம் வருகிறது.இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்.''என்று கத்தினார்.அங்கிருந்த அதிகாரி,''இதுஉடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.நீங்கள் முழு விபரங்கள் கொடுத்தால் நாங்கள் உங்களுக்கு உதவத் தயார்.இப்போது சொல்லுங்கள்,யாரிடமிருந்து உங்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வருகின்றன?''என்று கேட்டார்.வந்தவர் சொன்னார்,''வருமான வரி அலுவலகத்திலிருந்து.''
******
''என் மனைவி தனக்குத்தானே பேசிக் கொள்கிறாள்.என்ன செய்வது என்றே தெரியவில்லை,''என்று நண்பரிடம் அங்கலாய்த்தார் ஒருவர்.நண்பர் சொன்னார்,''அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.என் மனைவியும் அடிக்கடி தனக்குத்தானே பேசிக் கொள்வாள்.அவளுக்கே அது தெரிவதில்லை.என்ன,அவள் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வாள்.''
******
குடிகாரன் ஒருவன் சாக்கடையில் விழுந்து கிடந்தான்.அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர் கேட்டார்,''மது செய்த வேலைதானே இது?''குடிகாரன் சொன்னான்,''இல்லை,இது வாழைப்பழத் தோல் செய்த வேலை.''
******
பெண்களைக் கடத்திக் கொண்டு போய் ,பின் அவர்களது கணவர்களுக்குக் கடிதம் எழுதி மிரட்டி பணம் பெற்று விடுவிப்பது அவன் தொழில்.ஒரே மாதிரியாக அத்தொழிலை செய்தது அவனுக்கு போரடித்தது.அனைத்துத் துறையிலும் புதுமை விரும்புவோர் அமெரிக்கா செல்வதாக அறிந்த அவனும் அமெரிக்கா பயணமானான்.அங்கு இவன் தொழிலே செய்பவர்களைக் கண்டு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்ற விபரம் கேட்டான்.அவர்கள், பெண்ணைக் கடத்திக் கொண்டு வைத்துக் கொண்டு அவர்களின் கணவர்களுக்குக் கடிதம் எழுதி வரவழைத்து பணம் பறிப்பதாகக் கூறினர். நம்மாளுக்கோ ஏமாற்றம்.''இதைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். இதைத் தெரிந்து கொள்ளவா இவ்வளவு தூரம் வந்தேன்?''என்று அங்கலாய்த்தான்.அமெரிக்கனுக்கும் மானப் பிரச்சினை.தான் தொழிலில் உயர்வானவன் என்று காட்ட வேண்டுமே!''சரி,கடிதத்தில் என்ன எழுதுவாய்?''என்று கேட்டனர்.நம்மாளும் சொன்னான்,''நாளைக்குள் இந்த இடத்தில் ஒரு லட்ச ரூபாய் கொண்டு வந்து கொடுத்தால் உன் மனைவி உனக்கு. இல்லையெனில் அவளைப் பிணமாகத்தான் பார்ப்பாய் என்று எழுதுவேன்.''அமெரிக்கன் சொன்னான்,''அங்குதான் உன் பழமைத்தன்மை வெளிப்படுகிறது.நாங்களெல்லாம் அப்படி எழுத மாட்டோம்.''நம்மவனுக்கு இப்போது சுவாரசியம் வந்து விட்டது .அமெரிக்கன் தொடர்ந்தான்,''நாளைக்குள் இந்த இடத்தில் ஒரு லட்சம் டாலர் கொண்டு வந்து கொடுக்கா விட்டால் நாங்கள் உன் மனைவியை உன்னிடமே அனுப்பிவிடுவோம் என்று எழுதுவோம்.மறுநாளே அந்த ஆட்கள் அலறி அடித்துக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள்.''
அம்மா தோசை சுட்டுக் கொடுக்கக் கொடுக்க பையன் ஆவலுடன் சாப்பிட்டான்
வழக்கமாக ஐந்து தோசை சாப்பிடுவான்.அன்று எட்டு தோசை சாப்பிட்ட பின்னும் மீண்டும் தோசை கேட்டான்.அம்மா சொன்னார்,''தம்பி,இன்று போதும்.இதுக்கு மேல் சாப்பிட்டால் உன் வயிறு வெடித்துவிடும்.''பையன் சொன்னான்,''பரவாயில்லை அம்மா,நீ இன்னொரு தோசை சுட்டுக் கொடுத்து விட்டு, என் வயிறு வெடித்துவிடும் என்று பயந்தால் ஒதுங்கி நின்று கொள்.''
******
காதலன் காதலியிடம் சொன்னான்,''இன்று மட்டும் நமது வழக்கத்தை மாற்றிக் கொள்வோமே!''காதலி என்னவென்று கேட்டாள்.காதலன் சொன்னான்,''இன்று நீ என்னை முத்தம் இட முயற்சி செய்.நான் உன்னைக் கன்னத்தில் அறைகிறேன்.''
******
ஒருவன் நண்பனிடம் கேட்டான்,''ஒரு பெண்ணுக்கு எப்படி நீச்சல் சொல்லிக் கொடுப்பது?''நண்பன் சொன்னான்,''அது மிக நல்ல விசயமாயிற்றே!.
தண்ணீரில் இறங்கி முதலில் பெண்ணை இடுப்பை சுற்றிப் பிடித்துக் கொள்.பின் அவளுடைய வலது கையை மெதுவாக எடுத்து...''
''ஏய்,நிறுத்து.நான் என் சகோதரிக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும்.''
நண்பன் சொன்னான் ,''அப்படியானால் நீச்சல் மேடையிலிருந்து அவளை தண்ணீரில் தள்ளிவிட்டுவிடு.''
******
காதலி காதலனிடம் கேட்டாள்,''நீ என்னை உயிருக்குயிராய்க் காதலிப்பதாகச் சொல்கிறாயே,நான் உன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லைஎன்றால் தற்கொலை செய்து கொள்வாயா?''
காதலன் சொன்னான்,''உறுதியாக!அது என் பழக்கமாயிற்றே!''
******
காதலன் காதலியிடம் பெருமையாகக் கேட்டான்,''உன்வீட்டில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்?நான் கவிதை எழுதுவது,கதை எழுதுவது இதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா?''
காதலி சொன்னாள்,''இப்போதுதான் நீ தண்ணி அடிப்பது,சூதாடுவது பற்றிச் சொல்லியுள்ளேன்.எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சொல்ல முடியாதல்லவா?''
******
இளைஞன் ஒருவன் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடைக்குப் போனான்.ஒரு அட்டையில்,''நான் மிக விரும்பும் ஒரே ஒரு பெண்ணுக்கு என் வாழ்த்துக்கள்'' என்றுஇருந்தது.கடைக்காரர் சொன்னார்,''இதை நிறையப் பேர் விரும்பி வாங்குகிறார்கள்,''.உடனே இளைஞன் சொன்னான்,''அப்படியானால் அதில் ஆறு அட்டைகள் கொடுங்கள்.''
******



0