தேர்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது.அதில் பல பறவைகளின் கால்களின் படங்களைப் போட்டு பறவையின் பெயர் என்ன என்று கேட்டிருந்தனர்.ஒரு மாணவனுக்குஒரே குழப்பம். எல்லாம் ஒரே மாதிரி தெரிந்தது .அவனால் எந்தக் கால் எந்தப் பறவைக்கு உரியது என்றுகண்டு பிடிக்கவே முடியவில்லை. அவனுக்குக் கோபம் வந்தது.எழுந்தான்.''சே!இதுபோல மோசமான கேள்வித்தாளை நான் பார்த்ததே இல்லை,''என்று சொல்லிக் கொண்டே கேள்வித்தாள்,விடைத்தாள் அனைத்தையும் தூக்கி எறிந்தான்.அங்கிருந்த ஆசிரியருக்கு இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று புரியவில்லை. மெதுவாக,''தம்பி,உன் பெயர் என்ன?''என்று கேட்டார்.உடனே அவன் கோபம் சற்றும் குறையாது தனது பேண்டின் கால் பகுதியை மேலே தூக்கிக் காண்பித்து,''நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்,''என்றான்.
******
பாட்டி சொன்னாள்,''தம்பி,உனக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறந்திருக்கிறான். அவன் அப்படியே உன் அப்பனை உரிச்சு வைச்சது போல இருக்கிறான்,'' சிறுவன் குதூகலத்துடன் கேட்டான்,''அப்படியா?அவனுக்கு இப்போதே மீசையெல்லாம் இருக்கா?''
******
|
|
Post a Comment