மத போதகர் ஒருவர்,''நல்லவர்களும்,தெய்வநம்பிக்கை உள்ளவர்களும் சொர்க்கத்திற்குப் போவார்கள்,''என்று பிரசங்கம் செய்தார்.ஞானி ஒருவர்,''நீங்கள் சொல்வது எனக்கு குழப்பத்தைத் தருகிறது,''என்றார்.போதகர் விபரம் கேட்க ஞானி கேட்டார்,''ஒருவன் நல்லவனாய் இருக்கிறான். அவனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.அவன் சொர்க்கம் போவானா, மாட்டானா? ஒருவன் கொலைக்கு அஞ்சாத் திருடன். அவனுக்கு மிகுந்த தெய்வ நம்பிக்கை உண்டு. அவனுக்கு சொர்க்கமா, நரகமா? ஒரு அப்பாவிக்கு நல்லது கெட்டது தெரியாது.அவனுக்கு தெய்வம் பற்றியும் ஒன்றும் தெரியாது.அவனுக்கு எங்கே இடம்?ஒரு மன்னன் அடுத்த நாட்டின் மீது படையெடுத்து,நாட்டைக் கைப்பற்றி,பெரும் செல்வத்தையும் கைதிகளையும் கொண்டு வருகிறான்.அக்கைதிகளை வைத்து அந்த செல்வம் கொண்டு இறைவனுக்கு பெரிய ஆலயம் எழுப்புகிறான்.அவனுக்கு சொர்க்கம் தானா? அடிமையாக்கப்பட்ட அந்தக் கைதிகளுக்கு நல்லது செய்ய வழியில்லை. .தொடர்ந்த துயரங்களால் தெய்வத்தையே நிந்திக்கிறார்கள்.அவர்கள் சொர்க்கம் செல்வார்களா,நரகம் செல்வார்களா?''போதகர் பதில் சொல்ல இயலாது தலை குனிந்தார்.அன்றுஇரவு அவருக்கு ஒரு கனவு வந்தது.கனவில் அவர் ஒரு ரதத்தில் செல்கிறார்.ரதம் எங்கே செல்கிறது என்று வினவ அது சொர்க்கம் நோக்கி செல்வதாகப் பதில் வந்தது.புல் பூண்டு ஒன்றும் இல்லாமல் தண்ணீர் இல்லாமல் பாலை போலக் காட்சி அளித்த ஒரு இடத்தில் ரதம் நின்றது இது எந்த இடம் என்று வினவ இதுதான் சொர்க்கம் என்று பதில் ரதம் ஓட்டியவரிடமிருந்து வந்தது.''புத்தர் காந்தி,இயேசு எல்லாம் இங்கு இல்லையா''என்று கேட்க அப்படி யாரும் இங்கில்லை என்று சொல்லப்பட்டது.பின் ரதம் வேறு திசையில் பயணிக்கிறது.இனிய சோலைகள், நதிகள், ஆடிப்பாடும் மக்கள் நிறைந்த ஓரிடத்தில் இப்போது ரதம் நின்றது.இந்தஇடம் எது என்று கேட்க,''இதுதான் நரகம்.நீங்கள் கேட்ட புத்தர் இயேசு எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள்.''கனவு கலைந்தது.இப்போது போதகருக்கு தெளிவு ஏற்பட்டது.நல்லவர்கள் எங்கிருக்கிறார்களோ,அந்த இடமே சொர்க்கமாக மாறிவிடும்..
|
|
முடிவில் சொன்னது 100% உண்மை...
Nice!