மகிழ்ச்சியான தம்பதிகள் எப்படி இருப்பர்?
மனைவி விரும்புவதை கணவன் செய்வான்.
மனைவி விரும்புவதை மனைவி செய்வாள்.
******
உன்னுடைய குறைகளைக் கண்டு நீ சிரித்தால் உன் வாழ்க்கை நீண்ட நாள் வரும்.உன் மனைவியின் குறைகளை கண்டு நீ சிரித்தால் உன் வாழ்க்கை சீக்கிரம் முடிந்துவிடும்.
******
மனைவி:நான் எழுதிய ஆணைகளின் படி இந்த கணணி செயல் பட மாட்டேன் என்கிறதே!
கணவன்:அது கணணி தானே!கணவன் இல்லையே?
******
திருமணம் என்றால் என்ன?
எப்போது ஒரு மனிதனுக்கு ஏழாவது அறிவு உருவாகி மற்ற ஆறு அறிவுகளையும் சிதைத்து விடுகிறதோ,அப்போது அவனுக்குத் திருமணம் ஆகியுள்ளது என்று பொருள்.
******
திருமண வாழ்வில் நான்கு நிலைகள் உள்ளன;
*ஒருவர் மீது ஒருவருக்குப் பைத்தியம்.
*ஒருவருக்காக ஒருவர்.
*ஒருவரைக் கண்டால் அடுத்தவருக்குப் பைத்தியம்.
*ஒருவரினாலேயே அடுத்தவருக்குப் பைத்தியம்.
******
ஒரு மனிதனின் படுக்கை அறை எத்தகைய மணமுள்ளதாய் இருக்கும்?
திருமணம் ஆன முதல் மூன்று ஆண்டுகள்--
பூக்கள் ,பழங்கள்,வாசனை திரவியங்கள் ஆகியவற்றின் மணம் இருக்கும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு:
குழந்தைக்கான பவுடர்,குழந்தைக்கான எண்ணெய் வகைகள்,குழந்தையின் மலம்,சிறுநீர் ஆகியவற்றின் வாடைகள் இருக்கும்.
ஆண்டுகள் கழித்து:
தலைவலி மருந்து,உடல் வலி மருந்து ஆகியவற்றின் மணம் இருக்கும்.
ஆண்டுகளுக்குப் பிறகு:
பத்தி,சூடம்,சாம்பிராணி.முதலான மணங்கள்.
******
நன்றி:நண்பர் சித.மெய்யப்பன்.
|
|
திருமணம் ஆகியுள்ளது என்று பொருள் உட்பட அனைத்தும் ஹா... ஹா...