மூன்று பேர் அவர்கள் செய்து கடுமையான குற்றத்திற்காக முப்பது ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர்.ஒவ்வொருவரும் ஒரு கோரிக்கை வைக்கலாம் என்று கூறப்பட்டது.முதலாவது ஆள் பெண் வேண்டும் என்று கேட்டான் இரண்டாம் ஆள் செல்போன் வேண்டும் என்று கேட்டான்.மூன்றாவது ஆள் சிகரெட் கேட்டான்.மூவர் கோரிக்கைகளும் அதிகாரிகளால் நிறைவேற்றி வைக்கப்பட்டது.முப்பது ஆண்டுகளுக்குப்பின் மூவரும் விடுதலை பெற்று வெளியே வந்தனர்.அப்போது முதலாவது ஆள் ஒரு பெண்ணோடு பத்து குழந்தைகளோடு வெளியே சென்றான்.இரண்டாவது ஆள் செல்போன் மூலம் நடத்திய கமிசன் வியாபாரத்தினால்பெற்ற பத்து லட்சம் ரூபாயுடன் சென்றான்.மூன்றாமவனோ,வெளியே வந்ததும்,''சிகரெட் பத்த வைக்க நெருப்புப் பெட்டி கிடைக்குமா?''என்று எதிரில் வந்த ஆட்களிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
|
|
தேர்ந்தெடுப்பில் தான் வாழ்வே என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள் ஐயா...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்களுக்கு நன்றி,நண்பரே.