முல்லா மிகவும் கவலையுடன் இருந்தார்.அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் காரணம் கேட்டார்.முல்லா சொன்னார்,''மழை சரியாகப் பெய்யவில்லை.விளைச்சல் மிகவும் குறைவாக இருக்கிறது.என்ன செய்வதென்றே தெரியவில்லை.''பெரியவர்,''கவலைப்படாதே , முல்லா.இறைவன் மிகப் பெரியவன்.வானத்தில் பறக்கும் பறவைகளுக்கெல்லாம் படி அளக்கும் அவன் நம்மை விட்டு விடுவானா ?'' என்று ஆறுதல் சொன்னார்.முல்லா கடுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்,''நன்றாக அளப்பார்!ஏற்கனவே விளைச்சல் குறைவு என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.இதில் இருக்கும் தானியங்களையும் அவர் பறவைகளுக்கு அளந்து விட்டால் நான் என்ன செய்வது?''
|
|
ஹா... ஹா... நல்ல கேள்வி...!