கடவுளிடம் முணு முணுவென்று பேசி அவரை அறுப்பதை நிறுத்துங்கள். பிரார்த்தனை உணர்வுடன் இருங்கள்.அவன் சொல்வதைக் கவனியுங்கள். அதுதான் தியானம்.
********
மற்றவர்களின் விமரிசனத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் வாழ்க்கையே நாசமாகிவிடும்.யாருக்கும் யாரையும் குறை சொல்லத் தகுதியில்லை..முழு மனிதனாக மாற நீங்கள் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களோ, அப்படித்தான் அவர்களும் இருக்கிறார்கள்.
********
நம்மில் பலர் நாம் செய்துள்ள தவறை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் வேதனையைத் தவிர்க்க வேண்டி பிறர் மீது பழி சுமத்துகிறோம்.
********
முன்பெல்லாம் மனிதர்களை நேசித்தார்கள்.
பொருட்களைப் பயன் படுத்தினார்கள்.
இப்பொழுது.....
பொருட்களை நேசிக்கிறார்கள்.
மனிதர்களைப் பயன் படுத்துகிறார்கள்.
********
சிலரிடம் நிறைய இருந்தும் இன்னும் வேண்டும் என்று ஏங்குகிறார்கள். என்னிடம் குறைவாக இருந்தும் அந்த ஏக்கம் இல்லை.நிறைய இருந்தும் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.நான் மற்றவர்களுக்குக் கொடுக்கும் நிலையில் இருக்கிறேன்.அவர்களிடம் ஒன்றும் இல்லை என்னிடம் நிறைய இருக்கிறது.அவர்கள் வாழ்வதில்லை.நான் வாழ்ந்து வருகிறேன்.
********
|
|
சரியாகச் சொன்னீர்கள் சார்... நன்றி...
(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
Caution : Restore/Backup your HTML, before editing :
(1) Edit html Remove Indli Vote button script
(2) Remove Indli Follow Widget
தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)