ஒரு குரு தனது சீடர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, பாவம் செய்பவர்களை நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில் எப்படிப் போட்டு வாட்டுவர் என்பது பற்றி விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.பின் அவர்களிடம்,''நீங்கள் சொர்க்கம் போக விரும்புகிறீர்களா,நரகம் போக விரும்புகிறீர்களா?''என்று கேட்டார்.சீடர்கள்,''குருவே,நீங்கள் எங்கே செல்ல விரும்புவீர்கள்?''என்று கேட்டனர்.குரு மிகுந்த வருத்தத்துடன் சொன்னார்,'' நான் சிறு வயதில் நிறைய தவறுகள் செய்துள்ளேன்.எனவே நான் நரகம்தான் செல்வேன்,''உடனே சீடர்கள் அனைவரும் ஒரே குரலாய்,''அப்படியானால் நாங்களும் நரகம் தான் வர விரும்புகிறோம்.'' என்றனர்.குரு திகைத்துப் போனார்.கண்களில் நீர் மல்க.''என்மீது உங்களுக்கு அவ்வளவு பக்தியா?''என்று கேட்டார்.சீடர்கள் சொன்னார்கள்,''நரகத்தில் உங்களை எண்ணெய்க் கொப்பரையில் எப்படி போட்டு வாட்டுவார்கள் என்று நாங்கள் பார்க்க வேண்டாமா?''
|
|
சீடர்களுக்கு என்ன ஒரு ஆசை...! ஹா... ஹா...