செல்வந்தரான இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெரியவர் இறந்து விட்டார்.அவருக்கு இரண்டு பையன்கள். அவருடைய உயில் எடுத்து படிக்கப்பட்டது.உயிலில் அவர்,''என்னுடைய இரண்டு மகன்களும் நான் இறந்தபின் தங்கள் ஒட்டகங்களில் ஏறி மெக்கா செல்ல வேண்டும்.யாருடைய ஒட்டகம் மெக்காவுக்குக் கடைசியாகச் செல்கிறதோ,அவருக்கே எனது சொத்துக்கள் அனைத்தும் உரித்தாகும்,''என்று வித்தியாசமாக எழுதியிருந்தார்.மகன்கள் இருவரும் தங்கள் ஒட்டகங்களில் ஏறி மெக்கா நோக்கி சென்றனர்.எவ்வளவு மெதுவாகப் போக முடியுமோ அவ்வளவு மெதுவாகப் போனார்கள்.அப்படியும் மெக்கா எல்லைக்கு வந்து விட்டார்கள்.இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் மெக்கா எல்லையை சுற்றி சுற்றி வந்தனர்.அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் இவர்களின் நிலையைக் கண்டு காரணம் கேட்டார்.அவர்கள் பந்தய விபரத்தை சொல்லி இதற்கு முடிவு தெரியாமல் இருப்பதாகச் சொன்னார்கள் .கடைசியாகச் செல்பவர்தான் வெற்றி பெறுவார் என்றால் ஒருவரும் மெக்காவிற்குப் போக மாட்டார்களே!பெரியவர் யோசித்தார்.பின் அவர்களைப் பார்த்து,''நீங்களிருவரும் உங்கள் ஒட்டகங்களை மாற்றிக் கொள்ளுங்கள்,'' என்று யோசனை சொன்னார்.அவர்களுக்கு உடனே பொறி தட்டியது இருவரும் தங்கள் ஒட்டகங்களை மாற்றிக் கொண்டு மெக்காவை நோக்கிப் பறக்க ஆரம்பித்தனர்.
|
|
சிந்திக்க வைத்த பகிர்வு... நன்றி...