மரம் ஏறுவதில் கில்லாடியான ஒருவர் ஒரு பையனுக்கு மரம் ஏற சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.மர உச்சிக்குப் போய் சில கிளைகளை வெட்டச் சொல்லி அவனுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.பையனும் அவ்வாறே செய்யும்போது அவன் மிகுந்த ஆபத்தில் இருப்பதை உணர்ந்து பதைப்புடன் காணப்பட்டான்.அப்போது அவர் வாயே திறக்கவில்லை.வெட்டி முடித்தவுடன் அவன் கீழே இறங்கி வரும்போது,''பார்த்து கவனமாக இறங்கு,''என்றார்.இதையெல்லாம் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் அவரிடம்,''அவன் உச்சிக் கிளையில் ஆபத்தான சூழலில் இருக்கும்போது நீங்கள் ஒரு ஆலோசனையும் சொல்லவில்லை. இப்போது அவன் நினைத்தால் மரத்திலிருந்து குதித்து விடலாம்.இப்போது கவனமாக இருக்கச் சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள்.இது நியாயமா?''என்று கேட்டார்.அவர் சொன்னார்,''நீங்கள் கேட்பது நியாயமான கேள்விதான்.அவன் அவ்வளவு உயரத்தில் இருக்கும்போது,கிளைகள் முறிந்து கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அவன் மிகக் கவனமாக இருந்தான் எனவே நான் அப்போது அவன் கவனத்தைக் கலைக்க விரும்பவில்லை.ஆனால் அவன் குறைந்த உயரத்திற்கு இறங்கியவுடன்,அவன் தன வேலை முடிந்து விட்டது என்ற எண்ணத்துடன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.எனவே நான் அவனை எச்சரிக்க வேண்டியதாயிற்று.எந்த வேளையிலும் மிகவும் இலகுவான நிலையிலேயே மக்கள் அதிகம் தவறு செய்கிறார்கள்,''
|
|
/// எந்த வேளையிலும் மிகவும் இலகுவான நிலையிலேயே மக்கள் அதிகம் தவறு செய்கிறார்கள். ///
உண்மை சார்... நன்றி...
nalla pakrvu!