ஒரு தோட்டக்காரர் தன தோட்டத்தைப் பராமரிக்க ஒரு வயதான சாமியாரை நியமித்திருந்தார்.அவரும் கடுமையாய் உழைத்து அந்தத் தோட்டத்தை நன்றாகக் கவனித்துக் கொண்டார்.ஒரு நாள் தோட்டத்தின் உரிமையாளர் அங்கு வந்தபோது சாமியாரிடம்,மாமரத்திலிருந்து நான்கு மாம்பழங்களைப் பறித்து வரச் சொன்னார்.சாமியாரும் அவ்வாறே செய்தார்.மாம்பழத்தை ஆவலுடன் ருசி பார்த்த அவரின் முகம் அஷ்ட கோணலாகியது.அவர் சாமியாரிடம்,''என்னங்க பழம் ,இப்படிப் புளிக்குதே!''என்று கேட்டார்.சாமியார் அமைதியாக சொன்னார்,''நீங்கள் சம்பளம் கொடுத்து என்னை இங்கு நீங்கள் அமர்த்தியிருப்பது தோட்டத்தை நன்கு பராமரிப்பதற்கே.இந்த தோட்டத்தில் விளையும் காய் கனிகளை சாப்பிடுவதற்கு அல்ல.நான் எதையும் பறித்து சாப்பிடுவதில்லை.உங்கள் அனுமதியில்லாமல் எதையும் உண்ண மாட்டேன்.அதனால் இந்தப் பழம் இனிக்குமா,புளிக்குமா என்பது எனக்குத் தெரியாது.''
|
|
வேலையிலும் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என உணர்த்தும் கதை... நன்றி....