இடி அமீன் என்ற ஒரு கொடூரமான சர்வாதிகாரி பற்றி அனைவருக்கும் தெரியும்.அவரைக் கண்டால் அந்த நாட்டு மக்கள் மட்டும் அல்ல.உலகமே நடுங்கியது.அவரைப் பற்றிய மிக மோசமான செய்தி என்னவென்றால் அவர் மனித மாமிசம் சாப்பிடுபவர் என்பதுதான்.எப்போது அவர் தனி விமானத்தில் தான் சுற்றுவார்.ஒரு முறை அவர் பயணிகள் விமானத்தில் பயணிக்க நேர்ந்தது.பயணத்தின்போது உணவு வேளை வந்தது.விமானப் பணிப்பெண் பணிவுடன் அவர் அருகில் வந்து,''சாப்பிட என்ன வேண்டும்?''என்று கேட்டாள்.அவர் கோபமாக,''முதலில் பட்டியலைக் கொண்டு வா,''என்று ஆணையிட்டார்.அந்தப் பெண்ணும் விரைந்து சென்று உணவுப் பட்டியலை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள்.அதைப் பார்த்தவுடன் முகமெல்லாம் சிவந்து,அதைக் கிழித்து தூர எறிந்து விட்டு,''பயணிகளின் பட்டியலைக் கொண்டுவா,''என்றார்.சில பயணிகள் உடனே மயக்கம் அடைந்து விட்டனர்.
|
|
வித்தியாசமானவர்தான்! பகிர்வுக்கு நன்றி!