டாக்டர் நோயாளியைப் பரிசோதித்துவிட்டு சொன்னார்,''உங்கள் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.கொடிய நோயினை நீங்கள் நீண்ட காலம் கவனிக்காமல் விட்டு விட்டீர்கள்.இப்போது செய்வதற்கு ஒன்றும் இல்லை.உங்கள் வாழ்க்கை விரைவில் முடியப் போகிறது,'' நோயாளி, ''இன்னும் ஒரு வருடம் வாழ்வேனா,டாக்டர்?''என்று கேட்க, டாக்டர், ''அவ்வளவு காலம் எல்லாம் தாங்காது,''என்றார்.நோயாளி ஆறு மாதம் தாங்குமா என்று கேட்க, வாய்ப்பில்லை என்றார் டாக்டர்.''ஒரு மாதமாவது உயிரோடிருப்பேனா?''என்றதும் டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.உடனே நோயாளி,''எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது டாக்டர்,நன்றி''என்று கூறியவாறு எழுந்து வெளியே சென்று விட்டார். அவர் என்ன செய்யப் போகிறார் என்று ஜன்னல் வழியே டாக்டர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வண்டியில் ஒருவன் சவப்பெட்டி ஒன்றினை எடுத்து சென்று கொண்டிருந்தான்.உடனே நோயாளி,அந்த வண்டிக்காரனைப் பார்த்து, ''டாக்சி,டாக்சி,''என்று கத்திக் கொண்டே ஓடினான்.
|
|
நல்ல ஜோக்!
நன்றி,நண்பரே!