இங்கிலாந்து நாட்டில் பெண்களைக் கண்டால் ஆண்கள் தங்கள் தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்துவது உண்டு.ஒரு வயதான பெண்ணைக் கண்டு ஒரு இளைஞன் தொப்பியைக் கழற்றவில்லை.தனக்கு மரியாதை செய்யவில்லையே என்ற ஆதங்கத்துடன் அப்பெண்மணி,''பெண்களைக் கண்டால் தொப்பியைக் கழற்றும் மரியாதை உங்களுக்குத் தெரியாதா?''என்று கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்,''வயதான பெண்களுக்கு மட்டுமே நான் தொப்பியைக் கழற்றுவது வழக்கம்.''என்றான்.அந்த வயதான பெண்ணுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்லவும்வேண்டுமோ!
******
ஒரு சிறுவன் தனது நண்பனைக் கூப்பிட்டு தன் நாய் செய்யும் அதிசய செயல்களைக் காண்பித்தான்.அதிசயத்த நண்பன் ,''இது எப்படியடா சாத்தியம்?என் நாய் இதுமாதிரி எதுவுமே செய்வதில்லையே!'' என்றான்.சிறுவன் சொன்னான்,''அது ஒன்றும் பிரமாதமில்லை.இந்த நாய்க்குத் தெரிந்ததைக் காட்டிலும் உனக்குக் கொஞ்சம் கூடுதலாக விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.''
******
|
|
சாதுர்யமான பதில்கள்! பகிர்வுக்கு நன்றி!