மூன்று பேர் நன்றாகக் குடித்துவிட்டு தம் நினைவின்றி ,ஒரு ஆட்டோவில் ஏறினர்.ஆட்டோ டிரைவர் எங்கு போக வேண்டும் என்று கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தை சொல்லினர்.இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்ட டிரைவர்,கொஞ்ச நேரம் ஆட்டோ என்ஜினை ஓட விட்டு,வண்டியை நகர்த்தாமல் அதே இடத்தில் இருந்தார்.பின் என்ஜினை அமர்த்திவிட்டு அவர்களைப் பார்த்து,''நீங்கள் கேட்ட இடம் வந்துவிட்டது,இறங்குங்கள்,''என்றார்.முதலில் இறங்கியவன்,அவரிடம் பணம் கொடுத்தான்.இரண்டாவது இறங்கியவன் நன்றி சொன்னான்.மூன்றாவது இறங்கியவன் டிரைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.டிரைவரும் தமது குட்டு வெளிப்பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அந்தக் குடிகாரன் சொன்னான்,''ஏண்டாஇப்படிக் காட்டுத்தனமான வேகத்தில் ஆட்டோவை ஓட்டுகிறாய்?அடுத்த தடவை வரும்போது நிதானமாக ஓட்ட வேண்டும்.என்ன புரிந்ததா?''
|
|
நல்ல காமெடி!