முதலாளி தனது உதவியாளரைக் கூப்பிட்டு தலைமைக் கணக்கரை வரச் சொன்னார்.அப்போது மணி மாலை மூன்று.உதவியாளர் சொன்னார்,''அவர் வெளியே போயிருக்கிறார்,சார்,''''இந்நேரம் எங்கே போய்த் தொலைந்தார்?''என்று திட்டிக் கொண்டே தனது வேலையைத் தொடர்ந்தார் முதலாளி.அடுத்த நாள் மாலை மூன்று மணிக்கு அவரைக் கூப்பிட்டு வரச்சொல்ல அப்போதும் கணக்கர் வெளியே போயிருப்பதாக உதவியாளர் சொன்னான்.முதலாளிக்கு பயங்கரக் கோபம்.இருந்தாலும் அடக்கிக் கொண்டார்.மறுநாளும் மாலை நேரத்தில் கணக்கரை அழைத்து வரச்சொன்னார்.உதவியாளர் ,''இன்றும் வெளியேதான் போயிருக்கிறார்,'' என்றதும் முதலாளிக்கு வெறியே வந்துவிட்டது.''எங்கேயா தினசரி போகிறான் ,அவன்?தினமும் மாலை பொறுப்பில்லாமல் வெளியே சுற்றுகிறான்.வருடக் கணக்கை வேறு முடிக்கவேண்டும்,''என்று இரைந்தார்.உதவியாளர் சொன்னான்,''இன்று வருடத்தின் கடைசிநாள் அல்லவா?கணக்கை சரி செய்ய அவருக்குக் கடைசி வாய்ப்பினைப் பார்க்க வழக்கம் போல குதிரை ரேசுக்குப் போயிருக்கிறார்.''
|
|
Post a Comment