தந்தை தனது சிறுஎட்டு வயது மகனைக் கூப்பிட்டு,பணத்தைக் கையில் கொடுத்து,''கடைக்கு சென்று ஒரு கிலோ வெண்ணெய் வாங்கி,வா'' என்றார்.பையனும் உடனே தனது குட்டி நாயை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றான்.கடையில் சாக்லேட்டுகளைப் பார்த்தவுடன் அவனுக்கு ஆசை வந்துவிட்டது.எனவே தந்தை கொடுத்த அவ்வளவு பணத்துக்கும் சாக்லேட்டுகள் வாங்கிக் கொண்டான்.பின் வீட்டிற்கு வந்தவுடன் சாக்லேட்டுகளை பத்திரமாக ஒரு இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு,முகத்தை மிகவும் கவலைப் படுகிறார்போலத் தொங்கப்போட்டுக்கொண்டு தகப்பன் முன் நின்றான்.தந்தை கேட்டார்,''எங்கேடா வெண்ணெய்?''பையன் சோகமாக,''வெண்ணெய் வாங்கி வந்தேன்.வழியில் இந்த குட்டி நாய் என்னிடமிருந்து பறித்து வெண்ணெய் முழுவதையும் சாப்பிட்டு விட்டது'' என்றான்.உடனே தந்தை அந்த நாயைத் தூக்கி வீட்டில் இருந்த ஒரு தராசில் வைத்து நிறுத்தான் .அது ஒரு கிலோ இருந்தது.இப்போது பையனைப் பார்த்து அவர் கேட்டார்,''இதோ ஒரு கிலோ வெண்ணெய் இருக்கிறது.நாய் எங்கே?''
|
|
Post a Comment