சாதுரியமாக நடக்கக் கற்றுக் கொண்டவர்கள் தங்களைத் தலைவர்களாகவும் செல்வந்தர்களாகவும் உயர்த்திக்கொண்டு வளமான வாழ்க்கை வாழ்வார்கள். யாரும், தங்கள் மீது கருத்தைத் திணிப்பதை விரும்புவதில்லை.ஒருவன் தான் விரும்புவதை மற்றவர்களின் கருத்தாக அவர்களிடம் இருந்தே வெளிவரும்படி சாமர்த்தியமாகப் பேசுவதுதான் சாதுரியம்.சரியான நேரத்தில் சரியானதைப் பேசுவதும், செய்வதும் சாமர்த்தியமே.மற்றவர்கள் கோபம் கொள்ளாதபடி தன கருத்துக்களை அமைதியாக மென்மையாக எடுத்து சொல்லும் கலையே சாதுரியம்.
சாதுரியக்காரர்கள் தங்கள் பேச்சினாலும் செய்கையாலும் தாங்கள் சந்திக்கும் அனைவரையும் தங்களுக்கு உதவி செய்யும் நண்பர்களாக மாற்றிக் கொண்டு விடுவார்கள்.இவர்கள் யாருடைய மனமும் புண்படும்படி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார்கள்.யாருடைய சுய கௌரவத்தையும் பாதிக்கும்படியாக ஒரு சிறு செய்கை கூட செய்ய மாட்டார்கள்.மற்றவர்களின் உணர்வுகளையும் அபிப்பிராயங்களையும் மதித்து நடப்பார்கள்.இப்படிப்பட்டவர்களுடன் பேசி மகிழும் சந்தர்ப்பத்தை மற்றவர்கள் ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள். இவர்களுடைய முயற்சிகளுக்கு ஒத்துழைக்க அனைவரும் ஓடி வருவார்கள்.
சாதுரியமாக நடந்து கொள்வது என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கும் வரப்பிரசாதம் அல்ல.கடுமையான பயிற்சி கொண்டு அனைவரும் அடைய முடியும்.தன வாயிலிருந்து ஒரு வார்த்தை வருமுன் ,ஒரு செய்கை செய்யுமுன்,அவற்றின் எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சிந்தித்து கெடுதல் தரும் வார்த்தைகளையும் செயல்களையும் தவிர்ப்பவர்கள் அனைவரும் சாதுரிய மனிதர்களே!
|
|
Post a Comment