விஜய நகரப் பேரரசின் ராஜாவான வீர பல்லாலி வேட்டையாடப் போனபோது அடர்ந்த காடாய் இருந்த ஒரு பகுதியில் அகப்பட்டுக் கொண்டார்.வழி தெரியாது பசியில் துடித்தபோது ஒரு வயதான பெண்மணி வேக வைத்த பீன்ஸ் கொடுத்து பசியைப் போக்கினாள்.மகிழ்ந்த ராஜா அந்தக் காட்டிற்கு வைத்த பெயர் பெண்டாகாலூறு.(வேக வைத்த பீன்ஸ் ஊர்)அப்புறம் வந்த ஆங்கிலேயர்கள் அதை உச்சரிக்கத் தெரியாது பெங்களூர் என்று ஆக்கினார்கள்.இப்போது அது பெங்களூரு ஆகியுள்ளது.
********
'கர்ணம்'என்றால் சமஸ்கிருதத்தில் காது என்று அர்த்தம்.எழுதப்படாமல் ஒருவர் சொல்லி ஒருவர் என்று செவி வழியாக வந்த கதைகள் தான் கர்ண பரம்பரைக் கதைகள்.கேட்பதற்கு கொடூரமாக இருப்பது கர்ண கடூரம்.காதில் குண்டலத்தோடு பிறந்தவன் கர்ணன்.
********
'?'எப்படி வந்தது?'Questio' என்றால் கேள்வி என்று பொருள்.கேள்வி வாக்கியம் என்பதைத் தெளிவாக்க 'Questio' என்ற வார்த்தையின் முதல் மற்றும் கடைசி எழுத்தான q,o வை வாக்கியத்தின் இறுதியில் குறித்து வந்தனர்.நாளடைவில் 'q' வைத் திருப்பிப் போட்டு '௦'வை புள்ளியாக்கி விட்டனர்.இப்படித்தான் '?'உருவாயிற்று.
********
a.b.c,d என்ற ஆங்கில அகர வரிசையை 'alphabet' என்று சொல்கிறோம்.இந்த வார்த்தை எப்படி வந்தது?கிரேக்க மொழியில் முதல் எழுத்து alpha ,. ,இரண்டாவது எழுத்து beta. .இந்த இரண்டும் சேர்ந்துதான் 'alphabet' என்ற வார்த்தை உருவாயிற்று.இதேபோல்தான் தமிழில் 'அ'வை முதலாகக் கொண்டு வரும் அகராதியை 'அகர முதலி ' என்று சொல்கிறோம்.
********
|
|
Post a Comment