1.பகல் நேரக் கவலைகளை படுக்கைக்குக் கூட்டிக் கொண்டு போகக் கூடாது.
2.படுக்கை மிக மிருதுவாகவோ,மிகக் கடினமாகவோ இருக்கக் கூடாது.
3.இவ்வளவு நேரம் கட்டாயம் தூங்கியாக வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.தேவைப்படும் அளவுக்கு தூக்கம் இருந்தால் போதும்.
4.தூங்கச் செல்லுமுன் மிகவும் சுவாரசியமான விசயங்களைப் படிக்க வேண்டாம்.அந்த உற்சாகமே தூக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கும்.
5.தூக்கம் வரவில்லை என அலுத்துக் கொள்ள வேண்டாம்.கண்ணை மூடி சும்மா படுத்தாலே தானே தூக்கம் வரும்.
6.பசியுடன் படுக்கச் செல்லக் கூடாது.
7.படுக்கைக்குச் செல்லுமுன் புகை பிடித்தல்,சூடான பானம் அருந்துதல் கூடாது.
8.ஒருக்களித்துப் படுப்பது நல்லது.
9.இறுக்கமில்லாத ஆடைகளுடன் படுப்பது நல்லது.
|
|
Post a Comment