கிறிஸ்தவர் ஒருவர் இயேசுவின் பெருமையை விளக்க ஒரு ஜென் ஞானியை அணுகினார்.அவர் ஞானியிடம்,''நாங்கள் பின்பற்றும் நூலிலிருந்து உங்களுக்கு சிலவற்றை வாசித்துக் காட்டலாமா?''என்று கேட்க ஜென் ஞானியும்,''ஆஹா,அதற்கென்ன,வாசியுங்களேன்,''என்றார்.உடனே கிறிஸ்தவர்,இயேசுவின் மலைப் பிரசங்கத்தை துறவிக்குப் புரியுமாறு ஜப்பானிய மொழியில் சொன்னார்.அதைக் கேட்டு முடித்ததும் துறவியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டிற்று.அவர் வந்தவருக்கு நன்றி சொல்லிவிட்டு,''இவையெல்லாம் புத்தரின் வாக்கியங்களாயிற்றே,''என்றார்.வந்தவர் உடனே அதை மறுத்து,''இல்லை,இல்லை,இவை ஏசுபிரான் சொன்ன வாக்கியங்கள்.''என்றார்.துறவி சொன்னார்,''நீங்கள் என்ன பேர் வேண்டுமானாலும் சொல்லுங்கள்.இவை ஒரு புத்தரின் வாக்கியங்களே! இனி நான் என் சீடர்களிடம் ஏசுவும் ஒரு புத்தரே என்று சொல்லுவேன்.''நீங்களும் இறைத் தன்மையை உணர்ந்தால் இயேசு,புத்தர் போன்ற பெயர்கள் ஒரு பெரிய விசயமில்லை..
|
|
Post a Comment