சர்வாதிகார நாடு ஒன்றில் வாழ்ந்து வந்த ஒருவன் கிளி ஒன்றினை ஆசையாய் வளர்த்து வந்தான்.ஒரு நாள் திடீரென கிளி காணாமல் போய் விட்டது.மிகுந்த கவலையுடன் அவன் காவல் நிலையம் சென்று தன் கிளியைக் கண்டு பிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான்.அங்கிருந்த காவல் அதிகாரி அவனைப் பற்றியும் அவனுடைய கிளியைப் பற்றியும் பல விபரங்களைக் கேட்டார்.அவர் ,''உன்னுடைய கிளி நன்றாகப் பேசுமா?''என்று கேட்டார்.ஒரு நிமிடம் மிகுந்த அச்சத்துடன் யோசித்தான்.பின் அவன் தயங்கியபடியே சொன்னான்,'' கிளி நன்றாகப் பேசும் .ஆனால் அது பேசும் அரசியல் கருத்துக்கள் எல்லாம் அதனுடைய சொந்தக் கருத்துக்களே. .எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.''
|
|
Post a Comment